மேலும் அறிய

காரைக்காலில் இருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட 3000 மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் சரக்கு வாகனத்தில் நூதன முறையில் காரைக்காலில் இருந்து 3000 மதுபாட்டில்களை கடத்திய நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து  மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.

Vijay Politics Entry Public Opinion : விஜய் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? பொதுமக்கள் கருத்து என்ன?

காரைக்காலில் இருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட 3000 மதுபாட்டில்கள் பறிமுதல்

இந்நிலையில் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரகசியமாக மதுபானம் கடத்துவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நேற்று நள்ளிரவு மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

திண்டுக்கல்: காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

காரைக்காலில் இருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட 3000 மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்போது, அவ்வழியாக சந்தேகம்படும் விதமாக வந்த மினி சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் ஏதும் இன்றி காணப்பட்டுள்ளது. இருந்தும் சந்தேகம் தீராத காவல்துறையினர் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் மீண்டும் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காவல்துறையிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க நூதன முறையில் சரக்கு வாகனத்தில்  மது பாட்டில்களை வாகனத்தின் பிரத்யேகமாக தனி இடம் அமைத்து  மறைத்து வைத்து காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. 

காரைக்காலில் இருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட 3000 மதுபாட்டில்கள் பறிமுதல்

Covid-19: புதிய வகை கொரோனா தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்துக - மத்திய அரசு உத்தரவு

இதனை அடுத்து வாகனத்தில் 60 அட்டை பெட்டிகளில் இருந்த 3000 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களை மயிலாடுதுறை  தனிப்படை காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் சண்முகம் மற்றும் அவருடன் இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 3 லட்சத்திற்கும் மேல் இருக்கக் கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மயிலாடுதுறை காரைக்கால் எல்லை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டால்,  இதுபோன்ற கடத்தலை முற்றிலும் தடுக்கலாம் எனவும், இதனை சரியான முறையில் மேற்கொள்ளமால் இருப்பதே இதுபோன்ற கடத்தலுக்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Embed widget