மேலும் அறிய

விழுப்புரம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவில் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது

விழுப்புரம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவில் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த அபிராமேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களின் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் அணிந்திருக்கும் தங்கசங்கிலியை பறிக்கும் நபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படியும், குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் வண்ணம் சேப்டி பின், பெண் போலீசார் மூலம் வழங்கப்பட்டு தங்க சங்கிலிகளை செப்ட்டிபின் மூலம்  புடவையோடு இணைத்துக்கொள்ள அதை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை மீறியும் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்க சங்கிலியை சில பெண்கள் பறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் சிறிதுநேரம் நோட்டமிட்டு வந்தனர். பின்னர் நகை பறிக்க முயன்ற 3 பெண்களை காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் கணேசன், பாலசிங்கம் மற்றும் போலீசார், கையும், களவுமாக மடக்கிப்பிடித்தனர்.

அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கோவை பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி காளியம்மாள் (வயது 45), ஜோசப் மனைவி கவிதா (39), ராஜி மனைவி இசக்கியம்மாள் என்கிற மேகலா (38) என்பதும், இவர்கள் கோவில் திருவிழாக்களில் கூட்டாக சேர்ந்து பெண்களிடம் நகையை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும், இவர்கள் மீது விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காளியம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget