மேலும் அறிய

குடும்பத்துக்கு அவமானம்.. பழிவாங்க இனிப்பு வழங்கிய மாமியார்.. மருமகள் உட்பட 3 பேர் துடிதுடித்து பலி!

மத்தியப் பிரதேசத்தில் மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய எலி விஷம் கலந்த இனிப்புகளை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் எலி விஷம் கலந்த இனிப்புகளை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜனவரி 9ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிந்த்வாராவின் ஜுனார்தியோ பகுதியில் பொது சுகாதார பொறியியல் துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே காய்கறிகள் மற்றும் இனிப்புகள் கொண்ட ஒரு பை இருந்துள்ளது. இந்த பைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அந்த அலுவலகத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் தஷ்ரு யதுவன்ஷி எடுத்துப் பார்த்துள்ளார். 

அப்போது ஆர்வம் மிகுதியில் அதனுள் இருந்த இனிப்புகளை அவர் ருசித்துள்ளார். இதனையடுத்து கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட தஷ்ரு யதுவன்ஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜனவரி 11ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் தஷ்ரு யதுவன்ஷி அந்த இனிப்பு டப்பாவை அலுவலகம் அருகிலுள்ள கடைக்காரருக்கு கொடுத்துள்ளார். அவர் தன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த 22 வயதான குஷ்பூ கதுரியா மற்றும் 72 வயது தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். 
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குஷ்பூவும், அவரின் தாத்தாவும் உயிரிழந்தனர். தாயும், சகோதரியும் உயிர் பிழைத்தனர். 

மூன்று நாட்களில் மூன்று மரணங்கள் நிகழ்ந்ததால் போலீசாரால் இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. விசாரணையின் முடிவில் இவற்றுக்கெல்லாம் அடிப்படை இனிப்பு டப்பா என்பது தெரிய வந்தது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதில் எலி விஷம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பல திடுக்கிடும் தகவல்கல் வெளியானது. அதாவது கடந்த 2024 ஜனவரி மாதம் குஷ்புவுக்கு திருமணம் நடைபெற்றது. 

ஆனால் அவரது நடத்தை மீது மாமியார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக குஷ்பு குற்றம் சாட்டினார். இதனால் தங்கள் குடும்பத்தினருக்கு அவமானம் நடந்ததாக குஷ்பு மாமியார் கடும் கோபமடைந்துள்ளனர். இதனை சரி செய்யவும், மருமகளுக்கு  தக்க பாடம் புகட்டவும் மாமனார் ஜாது கசார், மைத்துனர் சுபம் மற்றும் மைத்துனி ஷிவானி ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மூன்று இனிப்பு டப்பாக்களில் எலி விஷம் கலந்து அந்த பையை குஷ்புவின் தந்தை கடைக்கு அருகில் வைத்துள்ளனர். எப்படியும் குஷ்பு அல்லது அவரது குடும்பத்தினர் உட்கொண்டு மரணிப்பார்கள் என்பதை எதிராளிகள் நம்பினர். அதன்படி குஷ்பு, அவரது தாத்தா தவிர சம்பந்தமில்லாத காவலாளியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு இனிப்புகளில் உள்ள ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாகவும், பலரைக் கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget