ஹாஸ்பிடலில் சிறுவனை அடித்துக் கொன்ற கும்பல்.. வேடிக்கை பார்த்த போலீஸ்... பதற வைக்கும் வீடியோ
இந்த கொலையை பலர் நேரில் பார்த்தனர், ஆனால் யாரும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் 14 வயது சிறுவனை மருத்துவமனைக்குள் புகுந்து கும்பல் ஒன்று அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சிவில் மருத்துவமனையில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள EWS காலனியில் சுமித்(17), இவரது சகோதரன் சவான்(15) ஆகியோர் வசித்து வந்தனர். இதனிடையே சம்பவம் நடந்த தினத்தன்று இரவு 9.30 மணியளவில் அதேபகுதியைச் சேர்ந்த சவானின் மைத்துனர் ராஜ்வீருடன், சுமித் ஆகியோர் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சாஹில், அங்கூர் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுமித்தை கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
Agar yahi haalat jaari Raha to Punjab ko @laluprasadrjd waala BIHAR banne me time nahi lagega....
— Nachiketa Chauhan.. (@s59165966) July 16, 2022
DAYLIGHT MURDER IN LUDHIANA in front of police...#prayforpunjab pic.twitter.com/kn9bZKXXqC
உடனடியாக ராஜ்வீரும், சவானும் சுமித்தை அழைத்துக் கொண்டு சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு சுமித்துக்கு சிகிச்சை நடக்க சவான் வெளியே காத்திருந்தார். அந்நேரம் அங்கு வந்த கும்பல் ஒன்று சவானை சரமாரியாக தாக்க தொடங்கியது. இதிலிருந்து தப்பிக்க நினைத்து சவான் அவசர பிரிவுக்கு சென்று அதன் கதவுகளை மூட முயன்றார். ஆனால் அந்த கும்பர் கதவை உடைத்துக் கொண்டு சவானை வாள், அரிவாள், அங்கிருந்த இரும்பு பொருட்களை கொண்டு தாக்கியது.
தாக்குதல் பற்றி அறிந்ததும் சுமித், ராஜ்வீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் சவான் உயிரிழந்து விட்டார். இதனிடையே தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என யாருமே இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
We can see Punjab police officer is also available at spot... Singh is king on duty is just for movies or history chapters...??? https://t.co/Kowv9ChGBe pic.twitter.com/Vku8w90p5n
— Rabies Daar Ji (@Ra_bies_Origin) July 16, 2022
குறிப்பாக சிவில் மருத்துவமனை வளாகத்தினுள் ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. ஆனால் இந்த கொலையை பலர் நேரில் பார்த்தனர், ஆனால் யாரும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 7 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவியில் காணப்பட்ட காட்சியில் தலைப்பாகை அணிந்த காவலர் ஒருவர் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இது போலீசாரின் செயலற்ற தன்மையை காட்டுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்