மேலும் அறிய

Crime : விளையாட்டு வினையானது.. 12-ஆம் வகுப்பு மாணவனை கொலைசெய்த 11-ஆம் வகுப்பு மாணவன்

விளையாட்டின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவனை 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல் ஊராட்சியை சேர்ந்தவர் திருமுருகன் (17).  இவர் மல்லல் ஊராட்சி அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மே மாதம், வழக்கம்போல் திருமுருகன் தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவுக்கார பையனான 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், இவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தபோது,  திருமுருகனுக்கும் அவருடைய உறவுக்கார பையனுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த மாணவன், திருமுருகனை ஆபாசமாகத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், அந்த மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு திருமுருகன் மீது ஏற்பட்ட கோபம் ஒருகட்டத்தில் வெறியாக மாறியுள்ளது. 

அந்த மாணவன் திருமுருகன் தன்னைத் தாக்கியது குறித்து தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனுடன் சேர்ந்த கூட்டாளிகள் திருமுருகனைக் கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 26- ஆம் தேதி,  திருமுருகன் வழக்கம்போல் பள்ளி  முடித்து அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மரக்குளம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே திருமுருகன் சென்றுகொண்டிருந்த போது, அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.

அந்த கூட்டத்தில் இருந்த முன்விரோதம் கொண்ட மாணவன், திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திருமுருகனின் தலையில் வெட்டியுள்ளனர். மேலும், பழிக்குப் பழி வாங்கிய மாணவன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த திருமுருகனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த திருமுருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார், திருமுருகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,   முக்கிய குற்றவாளியான பள்ளி மாணவனையும் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க,

Chennai Tirunelveli : ஹேப்பி நியூஸ் மக்கா..சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..எப்போது தெரியுமா?

Supreme Court: "அங்கு நடக்குது இங்கு நடக்குதுன்னு நியாயபடுத்தாதீங்க" மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைப்பு செய்திகள்

"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget