Digital Gold: அது என்ன டிஜிட்டல் தங்கம்.! எப்படி வாங்குவது? என்ன நன்மை ?
Digital Gold : டிஜிட்டல் தங்கமானது சேமிப்பாக மட்டும் இருப்பதில்லை, அதை முதலீடும் செய்யலாம்.
Digital Gold: தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இந்திய குடும்பங்கள் தங்கத்தை வாங்கும் ஆர்வத்தில் உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் , சமீப காலமாக டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதும் அதிகரித்து வருகிறது. சரி அது என்ன டிஜிட்டல் தங்கம்? அதை எப்படி இந்தியாவில் வாங்கலாம் என்று பார்ப்போம்.
டிஜிட்டல் தங்கம்:
நிதி சார்ந்த நிறுவனமான Moneyview, டிஜிட்டல் தங்கம் விற்பனை குறித்தான ஆய்வு ஒன்றை சுமார் 3,000 பேர்களிடம் நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது “ அதிக வருமானம் கொண்ட மக்கள் ஆபரண வடிவிலான தங்கத்தையே வாங்குவதை விரும்புகின்றனர் என்றும், நடுத்தர வர்க்கத்தினர் டிஜிட்டல் தங்கத்தின் பக்கம் அதிக அளவில் மாறுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
ஆய்வு நடத்தியவர்களிடம் 85% பேர் தங்கத்தை, பணத்தை சேமிக்கும் சொத்தாகக் கருதுகின்றனர்.
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?
டிஜிட்டல் தங்கம் என்பது அடிப்படையில் தங்கத்தின் ஒரு மெய்நிகர் வடிவமாகும். எளிதாக கூறவேண்டும் என்றால், நகையாக வாங்க தேவையில்லை, அதற்கு பதிலாக பணம் செலுத்தி டிஜிட்டல் வடிவிலான தங்கத்தை வாங்குவதாகும். அதை நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம்.
பாரம்பரிய தங்கம் சேமிக்கை உரிமைக்கு இடையூறு இல்லாத மாற்றை வழங்குவதாக பார்க்கப்படுகிறது. தங்கத்தின் சிறிய பகுதிகளைக்கூட வாங்கி, சேமித்து வைக்கலாம். சில நேரத்தில் ஆபரண தங்கம் தொலைந்து போக கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் டிஜிட்டல் கோல்டு வடிவில் தொலைந்து போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உங்கள் அனுமதியின்றி வேறொருவர் உரிமையாக்கிவிட முடியாது.
டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது எப்படி?
தீபாவளிக்கு டிஜிட்டல் தங்கம் வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலித்தால், பல்வேறு ஆன்லைன் தளங்களில் எளிதாக வாங்கி கொள்ளலாம். இந்தியாவின் குறிப்பிடத்தக்க டிஜிட்டல் தங்கம் வழங்குநர்களாக Augmont Gold, MMTC-PAMP India Pvt.Ltd மற்றும் டாடாவின் தனிஷ்க் உள்ளிட்ட நிறுவனங்களின் மூலமாக வாங்கி கொள்ளலாம்.
மேலும், பலரும் பயன்படுத்தி வரும் Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI செயலிகளின் வழியாக டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.
முதலீடும் செய்யலாம்:
உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நேரடியாக டிஜிட்டல் தங்கத்தை எளிதாக வாங்கவும், விற்கவும் மற்றும் நிர்வகிக்கவும் முடியும். டிஜிட்டல் தங்கத்தை சேமித்து வைக்கும் சொத்தாக மட்டும் இருப்பதில்லை. அதை நீங்கள் முதலீடும் செய்யலாம். NSE மற்றும் BSE போன்ற பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம் அல்லது டிஜிட்டல் தங்கத்தில் வழக்கமான முதலீடுகளைச் செய்ய SIPகளை (முறையான முதலீட்டுத் திட்டங்கள்) அமைக்கலாம்.