(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை; ஐ.டி., வங்கி, டெலிகாம் துறைகள் ஏற்றம்!
Stock Market: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதன் காரணமாக அதானி குழும பங்குகள் பங்குச்சந்தை சரிந்தது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருந்தது. நண்பகலில் செக்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்த நிலையில், மதியம் சரிவடைந்தது. 424 புள்ளிகள் சரிந்து, 79, 281 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் குறைந்து 24, 213 புள்ளிகளிலும் வர்தகத்தை தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 11.52 அல்லது 0.014 % புள்ளிகள் சரிந்து 79,691.84 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 19.05 அல்லது 0.032% புள்ளிகள் சரிந்து 24,359.15 ஆக வர்த்தகமாகியது.
அதானி குழும பங்குகள் கடும் சரிவு:
அதானி குழுமம், பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளில் காலையில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிந்தன. பங்குச்சந்தையும் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதார நிலவரம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, காலை முதலே ஆசிய பங்குச்சந்தையில் மந்தநிலை நிலவியது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் இருந்தது. பங்குச்சந்தை சரிவுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய நாளில் நிலவரம் அப்படியே இருக்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 17 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவிகிதம் சரிந்து ரூ.1,656-க்கு வர்த்தகமானது. அதானி வில்மர் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளின் விலை 3 சதவிகிதம் வரை சரிந்தது.
ஹிண்டன்பர்க் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இருவரும் பங்குகள் வைத்திருந்தனர். மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர். இதனால், அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டர்கார்ப், ஆக்சிஸ் வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ, டிவிஸ் லேப்ஸ், டாடா மோட்டர்ஸ், சிப்ளா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா ஸ்டீல், இந்தஸ்லேண்ட் வங்கி, கோடாக் மஹிந்திரா, ஹெச்.யு.எல்.,ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.
என்.டி.பி.சி., ஏசியன் போர்ட்ஸ், டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, பிரிட்டானியா, எஸ்.பி.ஐ., பவர்கிரிட் கார்ப், டாடா கான்ஸ் ப்ராட், நெஸ்லே, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அதானி எண்டர்பிரைசிஸ், கோல் இந்தியா, ரிலையன்ஸ், ரிலையன்ஸ், எம்&எம், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, லார்சன், ஈச்சர் மோட்டர்ஸ், விப்ரோ, ஹெச்.சி.எல்., ஐ.டி.சி., சன் ஃபார்மா, பஜாஜ் ஃபினான்ஸ், க்ரேசியம், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.