Stock Market Update: ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - 66 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்!
Stock Market Update:இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகிவருகிறது.
வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 168,17 அல்லது 0.25% புள்ளிகள் உயர்ந்து 65,792.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 49.70 அல்லது 0.25 % புள்ளிகள் சரிந்து 19,579.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
அப்பல்லோ மருத்துமனை, கோல் இந்தியா, சன் பார்மா, டைட்டன் கம்பெனி, ஓ.எஞி.சி., லார்சன், க்ரேசியம், ஐ.டி.சி., ஹெச்.டி.எஃப்.டி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், ரிலையன்ஸ், கோடாக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டர்கார்ப், டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி, அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ., பவர்கிட் கார்ப், அதானி எண்டர்பிரிசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஜெ.எஸ்.டபுள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஈச்சர் மோட்டர்ஸ். விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல்கள், ரியாலிட்டி, பார்மா, வாகனம், எண்ணெய், எஃப்எம்சிஜி பங்குகளின் வாங்குதல் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி தொடர்ந்தன.
2012 பங்குகள் மதிப்பு உயர்ந்திருந்தது. 1006 பங்குகள் மதிப்பு குறைந்தும், 117 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்ந்தன.
மேலும் வாசிக்க..
G20 Summit: ஜி20 உச்சிமாநாட்டை புறக்கணித்தார் சீன அதிபர்.. இருநாட்டு உறவில் மேலும் விரிசல்?
August Bike Sales: ஆகஸ்ட் மாத விற்பனையில் அசத்திய மோட்டார் சைக்கிள்..! முதலிடம் யாருக்கு தெரியுமா?