Stock Market Today: மாற்றமின்றி தொடரும் ரெப்போ ரேட் - திடீரென சரிந்த பங்குசந்தை
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
![Stock Market Today: மாற்றமின்றி தொடரும் ரெப்போ ரேட் - திடீரென சரிந்த பங்குசந்தை Stock Market Today Sensex, Nifty drop after RBI keeps repo rate unchanged for ninth time in row Stock Market Today: மாற்றமின்றி தொடரும் ரெப்போ ரேட் - திடீரென சரிந்த பங்குசந்தை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/9f9e8a3b89b304760b94658abd70c2e81723100500306333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகியது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமானது பங்குச்சந்தை. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 462.95 அல்லது 058% புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. காலை 11 மணி அளவில் 200 புள்ளிகள் உயர்ந்தது.
மதியம் 1 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 187.78 அல்லது 0.24 % புள்ளிகள் சரிந்து 79,225.46 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 66.80 அல்லது 0.27% புள்ளிகள் சரிந்து 24,216.70 ஆக வர்த்தகமாகியது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பங்குச்சந்தை கடும் சரிவடைந்தது. சென்செக்ஸ் 2,432.11 அல்லது 2.38% புள்ளிகள் சரிந்து 78,688.98 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 708.85 அல்லது 2.87% புள்ளிகள் சரிந்து 24,008.85 ஆக வர்த்தகமாகினது.வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. எனினும், 80 ஆயிரம் புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இப்போது 79 ஆயிரம் புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவித்தது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் அறிவிப்பிற்கு பிறகு சென்செக்ஸ் 240 புள்ளிகள் குறைந்தது வர்த்தக நேர முடிவில் ஏற்றம் காணலாம் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை:
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றமின்றி தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்.பி.ஐ.) அறிவித்துள்ளது.
தொடா்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது. நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது இருமாத நாணயக் கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.
ஸ்டாண்டிங் டெபாசிட் வசதி (எஸ்டிஎஃப்) விகிதம் 6.25 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதி (எம்எஸ்எஃப்) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவீதமாகவும் உள்ளது. நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்து வருவதாகம்வும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
டாடா மோட்டர்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, சிப்ளா, பாரதி ஏர்டெல், அதானி எண்டர்பிரைசிஸ், டாக்டர் .ரெட்டிஸ் லேப்ஸ், எம்& எம், பஜாஜ் ஆட்டோ, ஐ.டி.சி. எஸ்.பி.ஐ., டெக் மஹிந்திரா, சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.
ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், க்ரேசியம், பவர்கிரிட் கார்ப், நெஸ்லே, விப்ரோ, லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட், எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ, பி.பி.சி.எல்., டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனை, பிரிட்டானியா, மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, என்.டி.பி.சி., ரிலையன்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், டிவிஸ் லேப்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெட்.யு.எல், ஹெச்.சி.எல். டெக், டைட்டன் கம்பெனி, கோடாக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)