Stock Market Today:தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எதிரொலி - சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்வு!
Stock Market Today: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உயர்வை பதிவு செய்துள்ளது. அதன் விவரத்தை இங்கே காணாலாம்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,507 அல்லது 3.39 % புள்ளிகள் உயர்ந்து 76,468.78 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 733.20 அல்லது 3.25 புள்ளிகள் உயர்ந்து 23,263.90 ஆக வர்த்தகம் முடிந்துள்ளது.
இன்றைய வத்தக நேரத்தில் 13 துறைகள் லாபத்துடன் வர்த்தகமாகின. நிதி, எரிபொருள், ஆற்றல் உள்ளிட்ட துறையில் நிஃப்டியில் க்ரீனில் இருந்தன. நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து புதிய ரெக்கார்ட்டைபதிவு செய்துள்ளது.
வர்த்தக நேரத்தில் தொடக்கத்தில் நிலவரம்:
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,082 அல்லது 2.82 % புள்ளிகள் உயர்ந்து 76,043 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 628.60 அல்லது 2.79 புள்ளிகள் உயர்ந்து 23,159.30 ஆக வர்த்தகமாகியது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (04.06.2023) தொடங்குகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பா.ஜ.க.விற்கு) சாதகமாக உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் புதிய ரெக்கார்ட்டை பதிவு செய்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில், சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்ந்துள்ளது. செக்செக்ஸ் 1800 உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.