(Source: ECI/ABP News/ABP Majha)
Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 19,000 புள்ளிகளில் வர்த்தகமாகும் நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 150.54 அல்லது 0.23 % புள்ளிகள் அதிகரித்து 65,718.16 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 51.10 அல்லது 0.25% புள்ளிகள் உயர்ந்து 19,465 .95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல். டெக், டெக் மகிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், டிவிஸ் லேப்ஸ்,. கோடாக் மகிந்திரா, எஸ்.பி.ஐ. லைப் இன்சிரன்ஸ், டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஐ.டி.சி. ஜெ.எஸ். டபுள்யு ஸ்டீல், கோல் இந்தியா, பஜார்ஜ் ஆட்டோ, பஜார்ஜ் ஃபின்சர்வ், இந்தஸ்லேண்ட் வங்கி, லார்சன், டி.சி.எஸ். அதானி எண்டபிரைசர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., நெஸ்லே, ஆக்ஸி வங்கி, மாருதி சுசூகி விப்ரோ, க்ரேசியம், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்மெனி, சிப்ளா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
பவர்கிரிட் கார்ப், அப்பல்லோ மருத்துவமனை, எம். & எம்., சன் பார்மா, ரிலையன்ஸ், என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி., டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகின்றன.
கடந்த 9 நாட்களில் சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. நிப்ஃடி 19 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் வரலாறு காணாத அளவு உயர்துள்ளது.