Stock Market Closing : மீண்டது பங்குச்சந்தை... நீண்ட நாட்களுக்கு பிறகு 18 ஆயிரத்தை தொட்ட நிஃப்டி...ஐடி, ஆட்டோ பங்குகள் ஜோர்...!
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்குச்சந்தையில் நிஃப்டியானது 18,000 புள்ளிகளில் நிறைவடைந்தது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 242 புள்ளிகள் அதிகரித்து 61,275.09 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 86 புள்ளிகள் அதிகரித்து 18,000 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்திய பங்கு சந்தை, இன்றைய நாள் முடிவில் ( பிப்ரவரி 15 ) ஏற்றத்துடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாகவே பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
Sensex rises by 242 points to close at 61,275.09, Nifty gains 86 points to settle above 18,000 level
— Press Trust of India (@PTI_News) February 15, 2023
நிஃப்டி உயர்வுக்கு காரணம்
அமெரிக்காவில் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தியதன் காரணமாக, இந்திய பங்கு சந்தை உயர்ந்ததாக பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறை பணவீக்கம் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அடுத்து வரும் நிதிக் குழுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெருவது அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, இன்று காலை முதல் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகலில் சந்தை மீண்டது. மேலும், மாலை வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 61,275.09 புள்ளிகளிலும், நிஃப்டியானது 86 புள்ளிகள் உயர்ந்து 18,000 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இந்நிலையில், ஜனவரி 25ஆம் தேதியில் இருந்து நிஃப்டி புள்ளிகள் சரிவுடனே இருந்தன. இதனால் கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தை கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் நேற்று வரை நிஃப்டி புள்ளிகள் 18 ஆயிரம் புள்ளிகளை நெருங்காமல் இருந்தது. ஆனால் இன்று, நிஃப்டி புள்ளிகள் 18 ஆயிரத்தை தொட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குகள் நிலவரம்
டெக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி லைப், பஜாஜ் பின்சர்வ், கிராசிம், பாரதி ஏர்டெல், எம்எம், டாடா ஸ்டீல், நெஸ்டீலே, கோடக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி, எச்சிஎல் டெக், டெட்டன் கம்பெணி, கோல் இந்தியா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சன் பார்மா, லார்சன், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
Rupee falls 3 paise to close at 82.81 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) February 15, 2023
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 82.81 ரூபாயாக உள்ளது.