SBI Warning: போலி பணி நியமன கடிதங்களை நம்ப வேண்டாம் - எஸ்.பி.ஐ. முக்கிய எச்சரிக்கை..
SBI Warning: வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் என்று வெளியாகும் எந்த அறிவிப்பும் உண்மையல்லை என்று எஸ்.பி.ஐ.எச்சரித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் என்று வெளியாகும் எந்த அறிவிப்பும் உண்மையில்லை என்று எச்சரித்துள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியில் ப்ரொபேஷனரி அதிகாரி (Probationary Officers), 'Circle Based Officers' அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எஸ்.பி.ஐ. புரோபேசனரி அதிகாரிகள் 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. முதல்நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் 21-ம் தேதி வெளியானது. 'Circle Based Officers' அதிகாரிகள் வேலைவாய்ப்பிறகு விண்ணப்பிக்க டிசம்பர்,12 ம் தேதியோடு அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில், புரோபேசனரி அதிகாரிகள் பணி மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் உள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையத்தில் பரவியது. அதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு எஸ்.பி.ஐ. வங்கியில் இலச்சினையோடு பணி ஆணையும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் நிர்வாகத்திற்கு தெரிய வந்தது.
எஸ்.பி.ஐ. எச்சரிக்கை
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பணி நியமன ஆணை, வேலைவாய்ப்பிற்கு தேர்வானவர்களின் இறுதிப் பட்டியல் என பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக உலவும் எந்த தகவலும் உண்மையில்லை. சிலர் போலி தளங்களை ஹோஸ்ட் செய்துள்ளதை அறிகிறோம். எஸ்.பி.ஐ. வங்கியின் பெயரில் நியமன கடிதங்களை யாரும் நம்ப வேண்டாம். பணிக்கு தேர்வானவர்களின் பெயர்கள் ஏதும் நாங்கள் வெளியிடவில்லை. அப்படியான செய்திகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாங்கள் வெளியிடுவதுமில்லை. விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கான ரோல் நம்பர் / ரெஜிஸ்ட்ரேசன் எண் உள்ளிட்டவற்றை மற்றுமே வெளியிடுவது வழக்கம்.
மேலும், தேர்வான விண்ணப்பதார்களுக்கு தனித்தனியாக எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மற்றும் விரைவு தபால் ஆகியவற்றின் வழியாக உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பான அறிவிப்பு, நேர்காணல் அட்டவணை, தேர்வானவர்கள் விவர்ம் உள்ளிட்டவை அனைத்தும் https://www.sbi.co.in/careers - / https://bank.sbi/web/careers - என்ற அதிகாரப்பூர் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். ஸ்டேட் வங்கியின் பணியிடங்கள் நிரப்பப்படும் நடைமுறையை குறிவைத்து விண்ணப்பதாரர்களை ஏமாற்றும் மோசடிகளை நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
AAI Recruitment: டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? 119 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
IIITDM Recruitment: பி.டெக். படித்தவரா?ரூ.75,000 மாத ஊதியம் - வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் இதோ!