![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Share Market Today: சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரிப்பு - ஏற்றத்தில் பங்குச்சந்தை!
Share Market Today: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
![Share Market Today: சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரிப்பு - ஏற்றத்தில் பங்குச்சந்தை! Share Market Today: Sensex Rises Over 400 Points; Nifty Near 25K. Adani Ports Up 2% Share Market Today: சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரிப்பு - ஏற்றத்தில் பங்குச்சந்தை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/25a15d53e7697bf1a408b2f178a0a5cb1725015991992314_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் கடும் சரிவிற்கு பிறகு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 415 அல்லது 0.51 புள்ளிகள் உயர்ந்து 81,475.50 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 145.25 அல்லது 0.59 சதவீதம் புள்ளிகள் உயர்ந்து 24,942.20 ஆக வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் கடந்த வாரத்தில் அது ஆசிய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்செக்ஸ் 81 ஆயிரம் புள்ளிகளிலும் நிஃப்சி 24 ஆயிரம் புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகி வருகிறது. 83 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ் போர் பதற்றம் காரணமாக 1000 புள்ளிகள் குறைந்து 81 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் பொருத்தவரையில், அதானி போர்ட்ஸ், எம்&எம், என்.டி.பி.சி, அல்ட்ராசெம்கோ, எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவை ஏற்றத்துடனும் டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், டி.சி.எஸ்., டைட்டன், பஜாஜ் ஃபினான்ஸ் ஆகியவை சரிவுடனும் இருக்கிறது.
நிஃப்டி மிட்கேப் 100 புள்ளிகள் குறைந்து 0.13% ஆக இருந்தது. ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஹாங்காங், சியோல் உள்ளிட்ட சந்தைகள் சரிவுடன் இருக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசு அதிகரித்து 83.94 ஆக உள்ளது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ட்ரெண்ட், பாரத் எலக்ட்ரானிக், எம்&எம், என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப். சி. வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, சிப்ளா, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசிஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, எஸ்.பி.ஐ., லார்சன்,இந்தஸ்லேண்ட் வங்கி, ஓ.என்.ஜி.சி.ம், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, சன் ஃபார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், க்ரேசியம், கோடாக் மஹிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டாடா மோட்டர்ஸ், விப்ரோ, டி.சி.எஸ்.,பஜாஜ் ஃபினான்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஈச்சர் மோட்டர்ஸ், இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., நெஸ்லே, பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, மாருதி சுசூகி, ஹிண்டால்கோ அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)