Share Market Today: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு! இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை நிலவரம், எந்தெந்த துறைகளின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. வாரத்தின் இறுதிநாளில் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தமாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய பங்குச்சந்தை நிலவரம்:
சென்செக்ஸ், நிஃப்டி கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 553.19 அல்லது 0.69 % புள்ளிகள் உயர்ந்து 80,452.93 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 182.15 அல்லது 0.76% புள்ளிகள் உயர்ந்து 24,501.00 ஆக வர்த்தகமானது.
வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 600 புள்ளிகளாகவும் நிஃப்டி 24, 500 புள்ளிகளிலும் வர்த்தகமானது. ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ. இந்தாண்டு ரூ.9.3 லட்சம் மதிப்பிலான சப்ஸ்க்ரிப்சன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கபபட்டுள்ளது. ஆசிய சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருந்தது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 9% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட அதிகம் என்றும் ரூ.12,040 கோடியாக உள்ளது. நிஃப்டியை பொறுத்தவரையில் டி.சி.எஸ்., விப்ரோ, எல்.டி. மைண்ட்ரீ, இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்.இ.எல். டெக்னாலஜிஸ் லாபத்துடனும் மாருதி சுசூகி, டிவிஸ் லேப்ஸ், பி.பி.சி.எல்., கோல் இந்தியா, ஏசியண் பெயிண்ட்ஸ் சரிவுடன் வர்த்தகமாகின.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ், ஹெச்.சில்.எல். டெக், டெக் மஹிந்திரா, எல்.டி.ஐ. மைண்ட்ரீ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், க்ரேசியம், ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ், லார்சன், பஜாஜ் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஓ.என்.ஜி.சி., நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், பிரிட்டானியா, சிப்ளா, இந்தஸ்லேண்ட் வங்கி, எஸ்,பி.ஐ., எம் & எம், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அதானி போர்ட்ஸ், ஐ.டி.சி. பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
மாருதி சுசூகி, டிவிஸ் லேப்ஸ், கோல் இந்தியா, கோடாக் மஹிந்திரா, பி.பி.சில்.எல்., ஏசியன் பெயின்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி, அதானி ஹாஸ்பிடல், டாடா மோட்டர்ஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப். சி. வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.