Share Market : இன்று ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. ஏற்றத்தில் எஸ்பிஐ, கனரா வங்கி பங்குகள்..
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன
அமெரிக்க மத்திய வங்கியானது தனது வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழல் உள்ளிட்டவை காரணமாக, பங்குச் சந்தைகள் தொடர்ந்து சில தினங்களாக ஏற்றம் கண்டு வருகின்றனர்.
இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 378.3 புள்ளிகள் அதிகரித்து 61,124.89 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 118.5 புள்ளிகள் அதிகரித்து 18,130.70 புள்ளிகளாக உள்ளது.
Sensex climbs 378.3 points to 61,124.89 in early trade; Nifty advances 118.5 points to 18,130.70
— Press Trust of India (@PTI_News) November 1, 2022
லாபம்- நஷ்டம்
சிட்டி யூனியன், எஸ்பிஐ, அப்போலோ,கனரா வங்கி, கோடாக் மகேந்திரா. வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டாடா கெமிக்கல்ஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், ட்ரெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
டாடா ஸ்டீல், ஆக்சிஸ் பேங்க்,கோல் இந்தியா, பிவிஆர், பேட்டா இந்தியா,எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், லார்சென், அசோல் லேலேண்ட், பாரத் ஏர்டெல், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்:
மேலும், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் மத்திய வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கியின் அலுவல் கூட்டம், இந்த வாரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் வட்டி விகிதத்தில் குறைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சற்று ஏற்றம் கண்டு வருகிறது.
வலுவடையும் ரூபாய் மதிப்பு:
தற்போது சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. இதனால் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, சற்று வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது
Rupee rises 7 paise to 82.74 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) November 1, 2022
இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் அதிகரித்து 82.74 என்ற அளவில் உள்ளது.
Also Read: Gold Silver Price Today: சேமிப்பு திட்டம் இருக்கா? தங்கம் விலை உயர்வு! எவ்வளவுன்னு தெரியுமா?