Share Market: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 360 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ்..
Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
Share Market Closing Bell: இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 293.15% அல்லது 0.50% புள்ளிகள் குறைந்து 57, 683 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 102.10 அல்லது 0.54% புள்ளிகள் குறைந்து 17,000.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபம்-நஷ்டம்
ஐ.டி.சி., க்ரெசிம், டைட்டன் நிறுவனம், கோடாக் மஹிந்திரா,நெஸ்லே, சன் பார்மா,டிவிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டாக்டர், ரெட்டி லேப்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
பஜார்ஜ் ஃபின்சர்வ், அதானி எண்டர்பிரைஸ், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், விப்ரோ, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பாரத ஸ்டேட் வங்கி,டாடா மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டி.சி.எஸ். ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ், பவர்கிரிட் கார்ப், சிப்ளா, ஈச்சர் மோட்டார்ஸ், என்.டி.பி.சி., பிரிட்டானியா, ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹீரோ மோட்டர்கார்ப், பாரதி ஏர்டெல், எம்&எம், பஜார்ஜ் ஆட்டோ, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகினர்.
வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக நேர முடிவிலும் சரிவுடன் முடிவடைந்துள்ளன. என்.எஸ்.சி.-யில் அதானி, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளிட்டவகைகளின் பங்குகளின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன.
சந்தையில் தங்கத்தின் மதிப்பு அதிகரித்தையெடுத்து முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர்.அமெரிக்க வங்கி பங்குகளின் மதிப்பு சரிந்த பிரச்சனைகள் உள்ளிட்டவைகளால் பங்குச்சந்தையில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. கச்சா எண்ணெயின் விலை மதிப்பும் 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது.
மேலும் வாசிக்க.
TN Budget Highlights: தமிழ்நாடு பட்ஜெட்டில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவிப்புகள் என்னென்ன?
Tamil Nadu Budget 2023: ‘Sorry சொன்ன நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்’ - ஏன் தெரியுமா?