Share Market : சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை; 900 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!
Share Market Closing Bell : இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவுடன் முடிவடைந்துள்ளது.
Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 941.45 அல்லது 1.621 % புள்ளிகள் குறைந்து 58,195.75 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 262.35 அல்லது 1.53% புள்ளிகள் குறைந்து 17,146.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபம்-நஷ்டம்
டெக் மகேந்திரா, அதானி எண்டர்பிரைசர்ஸ்,அப்பல்லோ ஹாஸ்பிடல், பிரிட்டானியா ஒ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
இந்தஸ்லேண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், எம் & எம், எஸ்.பி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜார்ஜ் ஃபின்சர்வ், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்டஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட, ரிலையன்ஸ், கோடாக் மஹிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
சிலிக்கான் வேலி வங்கி மூடலின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் இந்திய வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. பொதுத்துறை வங்கியின் துறைசார் குறியீடு 2.87% தனியார் வங்கி 2.44% நிஃப்டி வங்கி 2.27% சரிந்தது.
மேலும் வாசிக்க..
இதையும் படிங்க..
Oscars 2023: ஆஸ்கர் அறிவித்த நொடி.. கண்ணீர் சிந்திய தீபிகா படுகோன்.. அரங்கில் உணர்ச்சிவசம்..