டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் அதிகரிக்கும் மோசடிகள்: ஆர்.பி.ஐ எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை
RBI:ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் நிகழும் மோசடிகளை குறைக்க விரைவில் அறிமுகமாக இருக்கும் திட்டம் குறித்த விவரத்தினை காணலாம்.
ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் நிகழும் மோசடிகளை தடுக்க விரைவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இண்டலிஜன்ஸ் ப்ளாட்ஃபாம் (Digital Payments Intelligence Platform) உருவாக்கப்பட உள்ளது.
நாட்டின் பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் மாறிவிட்ட அதனுடைய பாதுகாப்பிறாக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் பேமெண்ட்ஸ் முறையில் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அதன் பயனாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு அப்டேட்களை அவ்வபோது வழங்கி வருகிறது. சமீப காலமாக டிஜிட்டல் பணபரிமாற்றம் முறையில் மோசடி நிகழ்ந்துள்ளதற்கான புகார்கள் அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்ய சிஸ்டம் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இண்டலிஜன்ஸ் ப்ளாட்ஃபாம் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திசந்த தாஸ் அறிவித்துள்ளார்.
நிகழ்நேர டிஜிட்டல் நெட்வோர்க்கில் மோசடிகள் குறித்து கண்காணிக்கவும் நிகழ்நேர தரவுகளை டிஜிட்டல் பேமெண்ட் இகோசிஸ்டத்துடன் பகிரவும் ஒரு குழு மைக்கபப்ட்டுள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது மோசடிகளை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் பயனாளர்களின் நம்பிக்கைக்கு வழிவகுக்கும். மோசடிகளை கட்டுப்படுத்தில் வங்கிகள், NCPI, கார்டு நெட்போர்க்ஸ், பேமெண்ட் செயலிகள் ஆகியவை ஏற்கனவே நடிவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, ரிசர்வ் வங்கியின் இந்த புதிய முன்னெடுப்பு நவீன முறையில் மோசடிகளை குறைக்க உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சி - ஆர்பிஐ:
நடப்பு நிதியாண்டான 2024-2025ல் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி, மொத்தமாக 7.2 சதவிகிதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும், மூன்றாவது காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.