மேலும் அறிய

2000 Rupee Note: உங்க கிட்ட இன்னும் இருக்கா 2,000 ரூபாய் நோட்டு...நெருங்கும் கடைசி நாள்..செய்ய வேண்டியது என்ன?

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி தான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 Rupee Note: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி தான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. மே 2ஆம் தேதியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.  இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில்  தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், திரும்ப பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் வைப்பு தொகையாகவும், 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணத்தை எப்படி மாற்றுவது?

2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம். மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை. அதாவது, 20 ஆயிரம் ரூபாய் வரையில் எந்தவித ஆவணங்களும் இன்றி, பயனாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மறுத்தால் புகார் அளிக்கலாம்

வங்கிக் கிளையோ அல்லது வேறு எந்த நிறுவனமோ 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள மறுக்கும் சூழ்நிலையை யாராவது சந்தித்தால், புகாரின் பெயரில் அதற்கான தகுந்த வழி கிடைக்கும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் தனிநபர்கள் அந்தந்த வங்கிகளுக்குச் சென்று புகார் அளிக்கலாம். செப்டம்பர் 30, 2023க்கு முன் இதைச் செய்வது முக்கியம். 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதிலில் புகார்தாரர் அதிருப்தி அடைந்தாலோ, RBI போர்ட்டல் cms.rbi.org.in இல் புகாரைப் பதிவுசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

இந்த மாதத்தில் நாடு முழுவதும் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டு, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 

Bank Holidays September 2023: அலர்ட் மக்களே: நாளையில் இருந்து பேங்க் போறீங்களா? அப்போ இதை பார்த்துட்டு போங்க!

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget