Bank Holidays September 2023: அலர்ட் மக்களே: நாளையில் இருந்து பேங்க் போறீங்களா? அப்போ இதை பார்த்துட்டு போங்க!
செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Bank Holidays September 2023: செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வங்கிகள் விடுமுறை:
வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிரது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
செப்டம்பர் மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, பார்சி புத்தாண்டு, ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, விநாயகர் சதுர்த்தி, நுவாகை, நாராயண குரு சமாதி, ஸ்ரீ மந்த சங்கரதேவ் பிறந்தநாள் ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், இந்த விடுமுறையானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, ஸ்ரீ மந்த சங்கரதேவ் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 25ஆம் தேதி அன்று, அசாம் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தின பட்டியல்:
- செப்டம்பர் 3: மாதத்தின் முதல் ஞாயிறு
- செப்டம்பர் 6: கிருஷ்ண ஜென்மாஷ்டமி ( புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், பாட்னாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 7: கிருஷ்ண ஜென்மாஷ்டமி (அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
- செப்டம்பர் 10: மாதத்தின் இரண்டாவது ஞாயிறு
- செப்டம்பர் 17: மாதத்தின் மூன்றாவது ஞாயிறு
- செப்டம்பர் 18: விநாயகர் சதுர்த்தி ( பெங்களூரு, தெலங்கானவில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 19: விநாயகர் சதுர்த்தி (அகமதாபாத், பேலாபூர், புவனேஸ்வர், மும்பை, நாக்பூர், பனாஜியில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 20: விநாயர் சதுர்த்தி மற்றும் நுவாகை ( கொச்சி, புவனேஸ்வர்)
- செப்டம்பர் 22: நாராயண குரு சமாதி (கொச்சி, பானாஜி, திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 23: நான்காவது சனிக்கிழமை
- செப்டம்பர் 24: வாரத்தின் நான்காவது ஞாயிறு
- செப்டம்பர் 25: ஸ்ரீமந்த சங்கர்தேவ் பிறந்தநாள் (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 27: மிலாட்-இ-ஷரீப் (ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 28: ஈத்-இ-மிலாத் (அகமதாபாத், ஜஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, ராய்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை)
- செப்டம்பர் 29: ஈத்-இ-மிலாத் (காங்டாக், ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி வங்கிகளுக்கு கூடுதலாக 4 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 6ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி, செப்டம்பர் 9 மற்றும் 23ஆம் தேதிகளில் சனிக்கிழமை, செப்டம்பர் 28ஆம் தேதி ஈத்-இ-மிலாத்திற்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலும் தமிழகத்தில் இதே மாதிரி 4 நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.