மேலும் அறிய

Petrol-Diesel Price, 22 October: இறங்காமல் அடம்பிடிக்கும் பெட்ரோல் விலை: சதத்தை நெருங்கும் டீசல்!

செவ்வாய் அன்று மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலையில் கடந்த இரண்டு தினங்களாக சில காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து 100 ரூபாயை நெருங்குகிறது.

Petrol Diesel Rate Today, 22 Oct: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூ.103.61க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.92-க்கு விற்பனையாகிறது.  ஒரு லிட்டர் டீசல், ரூ.99.59க்கு விற்பனையான நிலையில் 33 காசுகள் அதிகரித்து ரூ. 99.92-க்கு விற்பனையாகிறது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் அன்று மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலையில் கடந்த இரு தினங்களாகவும், இன்றும் சில காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து 100 ரூபாயை நெருங்குகிறது.

முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.

Petrol-Diesel Price, 22 October: இறங்காமல் அடம்பிடிக்கும் பெட்ரோல் விலை: சதத்தை நெருங்கும் டீசல்!

மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்
IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்
“பிரதமரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி” கையில் கொண்டு போன ஃபைலில் இருந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
“பிரதமரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி” கையில் கொண்டு போன ஃபைலில் இருந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
Breaking News LIVE, JULY 16:சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
Breaking News LIVE, JULY 16:சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
Viduthalai 2 First look: மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்!  நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்! நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rowdy Arrest | கட்டிலுக்கு அடியே பதுங்கு குழி..பயங்கர ஆயுதங்களுடன் ரௌடிகள்! தட்டித்தூக்கிய போலீஸ்Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்
IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்
“பிரதமரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி” கையில் கொண்டு போன ஃபைலில் இருந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
“பிரதமரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி” கையில் கொண்டு போன ஃபைலில் இருந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
Breaking News LIVE, JULY 16:சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
Breaking News LIVE, JULY 16:சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
Viduthalai 2 First look: மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்!  நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்! நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும்- செல்வப்பெருந்தகை
கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும்- செல்வப்பெருந்தகை
MR Vijayabhaskar Arrest: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி அதிரடி
MR Vijayabhaskar Arrest: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி அதிரடி
CM Stalin: காவிரி விவகாரம் - தொடங்கியது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
CM Stalin: காவிரி விவகாரம் - தொடங்கியது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி
Embed widget