மேலும் அறிய

Petrol-Diesel Price, 18 October: பதுங்குவது பாயத்தானா... இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் விலை கடந்த மூன்று நாட்களாக 102 ரூபாயை எட்டியுள்ள நிலையில், நேற்று 103 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Petrol Diesel Rate Today, 18 Oct: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 31 காசுகள் அதிகரித்து ரூபாய் 103.01-க்கு விற்பனையான நிலையில், இன்று விலைமாற்றமின்றி அதே விலைக்குவிற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல், 33 காசுகள் அதிகரித்து ரூபாய் 98.92-க்கு விற்பனையானது. இதுவும் விலைமாற்றமின்றி அதே விலைக்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை கடந்த மூன்று நாட்களாக 102 ரூபாயை எட்டியுள்ள நிலையில், நேற்று 103 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.


Petrol-Diesel Price, 18 October: பதுங்குவது பாயத்தானா... இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget