Petrol and diesel prices Today: அது நேத்து... இது இன்னைக்கு... மீண்டும் விலையேறிய பெட்ரோல், டீசல்!

சென்னையில் நேற்று விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  


இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த மே 16ஆம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. 


கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து - அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை


இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தும், எந்த மாற்றமும் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.86க்கும், இதேபோல், ஒரு லிட்டர் டீசல்  ரூ.88.87க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


இந்நிலையில், சென்னையில் கடந்த 25ஆம் தேதி பெட்ரோல் விலை 95 ரூபாய் தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.95.06க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசு அதிகரித்து ரூ.89.11க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை 96 ரூபாயை தாண்டியது.



Petrol and diesel prices Today: அது நேத்து... இது இன்னைக்கு... மீண்டும் விலையேறிய பெட்ரோல், டீசல்!


இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.96.71க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல்  விலை 26 காசு உயர்ந்து ரூ.90.92க்கும் விற்பனை  செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைமாற்றமின்றி இதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  


இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலையும் 23 காசுகள் அதிகரித்து ரூ.91.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஒருமாதம் ஆன நிலையில் பெட்ரோல் விலை குறைக்கக்கோரி பலர் வலியுறுத்துகின்றனர். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை நிலையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறுகுறு தொழில் கடனைச் செலுத்த கால அவகாசம் : முதலமைச்சரின் கடிதம் சொல்வது என்ன?

Tags: petrol price diesel price Petrol and diesel price Petrol Price Today Rise petrol price today Petrol and diesel price rise petrol price today

தொடர்புடைய செய்திகள்

Income Tax Website: வருமான வரித்துறையின் புதிய இணையதளம் : எப்படி பயன்படுத்துவது? சிறப்பம்சம் என்ன?

Income Tax Website: வருமான வரித்துறையின் புதிய இணையதளம் : எப்படி பயன்படுத்துவது? சிறப்பம்சம் என்ன?

விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்

விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்

Gold Silver Price Today: தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

Gold Silver Price Today: தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

Petrol and diesel prices Today: ம்... ஸ்டெடி... ஸ்டெடி... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

Petrol and diesel prices Today: ம்... ஸ்டெடி... ஸ்டெடி... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

Gold Silver Price Today: சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்... குறைந்தது தங்கம் விலை!

Gold Silver Price Today: சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்... குறைந்தது தங்கம் விலை!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!