மேலும் அறிய

Petrol Diesel Price Today : சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூபாய் 102.49க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39க்கும் விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது.  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 29 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 102.49க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலே இன்றும் விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது முதல் (மே 2), தற்போது வரை கிட்டத்தட்ட 40 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.          


Petrol Diesel Price Today : சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?  

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம்:  இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.


Petrol Diesel Price Today : சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.    

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget