மேலும் அறிய

Petrol, Diesel Price : 41 நாட்களாக இன்றும் மாறாத பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் தொடர்ந்து 40வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் இன்றும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை மத்திய அரசு தீபாவளியன்று குறைத்தது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்றும் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 41வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2017 நிலவரப்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது, இது டைனமிக் எரிபொருள் விலை முறை என்று அழைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில்,  இதற்கு முன்பு ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் விலை மாற்றியமைக்கப்பட்டது. 

அமெரிக்க டாலருக்கு ரூபாய் மாற்று விகிதம், கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய குறிப்புகள், எரிபொருளுக்கான தேவை மற்றும் பல இதில் அடங்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, ​​இந்தியாவில் விலை உயரும். எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். VAT மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் வாட் ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட இருமடங்காகிறது. 


Petrol, Diesel Price : 41 நாட்களாக இன்றும் மாறாத பெட்ரோல், டீசல் விலை!

முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.

ஏறத்தாழ 50 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை விடுவிப்பதற்கு இந்தியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப் பயன்பாட்டு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் அதனைச் சமாளிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தங்கள் கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்குமாறு கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget