மேலும் அறிய

Petrol, Diesel Price : சென்னையில் மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை...! - வாகன ஓட்டிகள் வேதனை

Petrol Diesel Price Today, Sep 28: சென்னையில் இன்று பெட்ரோல் 10 காசுகள் உயர்ந்தும், டீசல் 24 காசுகள் உயர்ந்தும் பெட்ரோல் ரூபாய் 99.15க்கும், டீசல் ரூபாய் 94.17க்கும் விற்கப்படுகிறது.

Petrol Diesel Rate Today, Sep 28:  சென்னையில் பெட்ரோல் விலை கடந்த சில தினங்களாக ரூபாய் 98.96க்கு தொடர்ந்து விற்கப்பட்டு வந்தது. டீசல் விலையும் ரூபாய் 93.46க்கு தொடர்ந்து விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டீசல் விலை மட்டும் கடந்த மூன்று நாட்களாக உயர்ந்த நிலையில் பெட்ரோல் விலையும் இன்று உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை இன்று 19 காசுகள் உயர்ந்து ரூபாய் 99.15க்கு விற்கப்படுகிறது.  டீசல் விலை நான்காவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இன்று 24 காசுகள் 94.17க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூபாய் 100க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக ரூபாய் 100க்கும் குறைவாக விற்பனையாகி வந்த பெட்ரோல் விலை தற்போது மீண்டும் ரூபாய் 100-ஐ நெருங்கியிருப்பது வாகன ஓட்டிகளுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Petrol, Diesel Price : சென்னையில் மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை...! - வாகன ஓட்டிகள் வேதனை

முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.


Petrol, Diesel Price : சென்னையில் மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை...! - வாகன ஓட்டிகள் வேதனை

மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.
 
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (20.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; மழைக்கு மத்தியில் மாஸ் காட்டப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (20.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; மழைக்கு மத்தியில் மாஸ் காட்டப்போவது யாரு?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
Gold rate today : வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Embed widget