மேலும் அறிய

Petrol Diesel Price Today: பெட்ரோல், டீசல் விலையில் நிகழ்ந்த மாற்றம் என்ன?.. இன்றைய நிலவரம் இதோ..!

Petrol Diesel Price Today, January 9: இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

Petrol Diesel Price Today, January 9: 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 9ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 598வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Fuel Price Hike: போரால் ஒரே அக்கப்போர்; மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை- சென்னையில் புதிய விலை என்ன?
Fuel Price Hike: போரால் ஒரே அக்கப்போர்; மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை- சென்னையில் புதிய விலை என்ன?
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
TN Election 2026 Survey: மீண்டும் ஆட்சியமைக்கும் திமுக; தவெகவுக்கு இத்தனை தொகுதியா? அப்போ அதிமுக? வெளியான கருத்துக்கணிப்பு
TN Election 2026 Survey: மீண்டும் ஆட்சியமைக்கும் திமுக; தவெகவுக்கு இத்தனை தொகுதியா? அப்போ அதிமுக? வெளியான கருத்துக்கணிப்பு
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
Embed widget