மேலும் அறிய

Petrol Diesel Price Today: புதிதாக மாறிய தமிழ் மாதமும், வாரமும்! குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம்

Petrol Diesel Price Today, January 17: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Petrol Diesel Price Today, January 17: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 17ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 606வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
Embed widget