மேலும் அறிய

Petrol, Diesel Price: பெட்ரோல் விலையில் மாற்றமா? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்!

Petrol, Diesel Price: சென்னையில் 80ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

சென்னையில் 80ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

அதன்பின் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விலையைக் குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 


Petrol, Diesel Price: பெட்ரோல் விலையில் மாற்றமா? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்!

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 80ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Gold Rate Today: அடித்தது யோகம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 சரிந்த தங்கம் விலை! விரைவில் ரூ.78,000-க்கு குறையுமா?
Gold Rate Today: அடித்தது யோகம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 சரிந்த தங்கம் விலை! விரைவில் ரூ.78,000-க்கு குறையுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
Embed widget