Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு : தவிக்கும் மக்கள்...!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 38 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 101.67க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூபாய் 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 38 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்: நேற்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் மத்திய அரசின் பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிரான கண்டன போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்களூம்,மாநில நிர்வாகிகளும் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர்.
State Secretaries of @TamilNaduPMC organised protests in fuel stations around the state condemning the constant increase in the prices of fuel and lpg. #AIMCProtestsPriceRise pic.twitter.com/qDuV5i3JSy
— Tamil Nadu Pradesh Mahila Congress (@TamilNaduPMC) July 9, 2021
பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம்: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.