search
×

Sovereign Gold Bond | துவங்கியது ஆன்லைன் தங்க பத்திர விற்பனை.. இந்த முறை குறைஞ்ச விலை, தவறவிடாதீங்க..

நடப்பு ஆண்டின் முதல் தங்க பத்திர விற்பனையான இது முதலீட்டுக்கு மிக சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 9 சீரீஸ் ஆன இது ஜனவரி 10 நேற்று துவங்கியது. ஜனவரி 14 அன்று முடிவடைய உள்ளது.

FOLLOW US: 
Share:

ஒரு கிராம் தங்கம் விலை 4,786 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கம் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் தற்போது டிஜிட்டல் தங்கத்தின் மீதும் ஆர்வம் அதிகரித்து செல்கிறது. இந்நிலையில் தங்கம் பத்திரங்கள் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சாதாரண (physical) தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற செலவினங்கள் உள்ளன. அதோடு பாதுகாப்பு குறித்தான பிரச்சனையும் உள்ளது. இத்துடன் தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாக உள்ளது.

பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலம் கூட வாங்கிக் கொள்ளலாம். டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். வங்கிகள், அஞ்சல் அலுவலகம் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், அங்கு டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் 9 ஆம் கட்ட வெளியீட்டில் 4,736 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

சாதாரண (physical) தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெறலாம். இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. சாதரண (physical) தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினையும் பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியத் இருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

கேபிட்டல் டேக்ஸ் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுது இல்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம், குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.

இந்த தங்க பத்திரம் சாதாரண (physical) தங்கத்தினை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். இது முதலீட்டு நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். ஆனால், இந்த திட்டத்தின் மூலம் நாம் சாதரண (physical) கோல்டாக பெற முடியாது.

Published at : 12 Jan 2022 07:30 AM (IST) Tags: india Gold sovereign bond

தொடர்புடைய செய்திகள்

Income Tax Saving: ரூ.10 லட்சம் சம்பாதித்தாலும், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை..! எப்படி தெரியுமா?

Income Tax Saving: ரூ.10 லட்சம் சம்பாதித்தாலும், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை..! எப்படி தெரியுமா?

Income Tax: மனைவிக்கு வீட்டு வாடகை கொடுத்து ரூ.1.80 லட்சம் வரியை சேமிக்கலாம் - எப்படி? முழு விவரம் இதோ..!

Income Tax: மனைவிக்கு வீட்டு வாடகை கொடுத்து ரூ.1.80 லட்சம் வரியை சேமிக்கலாம் - எப்படி? முழு விவரம் இதோ..!

Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்

Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்

EPS Rules Changed: இனி 6 மாதங்களே போதும்..! பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!

EPS Rules Changed: இனி 6 மாதங்களே போதும்..! பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!

ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!

ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!