மேலும் அறிய

மருத்துவ அவசரகாலங்களில் பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி! எப்படி பெறுவது?

கொரோனா தொற்றுநோய் அல்லது ஏதேனும் மருத்துவ அவசரநிலையின்போது திடீரென பணம் தேவைப்பட்டால் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைய நேரலாம்

கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் நிதி நெருக்கடியினைச்சந்தித்து வரும் நிலையில், அவசர மருத்துவத்தேவைகளுக்கு  எந்த ஆவணங்களையும் காட்டாமல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் (இபிஎஃப்) கீழ் அதன் உறுப்பினர்கள் ரூ. 1 லட்சம் வரை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைந்தப்பாடில்லை. இந்த வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிக்க அதனைக்கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நேரத்தில் யாரும் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் தான், முதல் அலையின் போது, “ பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் ஒரு பகுதியாக மாதம் வருமானம் பெறும் பிஎஃப் உறுப்பினர்கள் அவர்களின் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்கும் முறையினை மத்திய அரசு அமல்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் முதல் பிஎஃப் கணக்கிலிருந்து அதன் உறுப்பினர்கள் அவர்களுக்கு தேவைப்படக்கூடியப் பணத்தினை எடுத்துப் பயன்பெற்று வருகின்றனர். முன்னதாக, மருத்துவ அவசரநிலைகளுக்கு ஈபிஎஃப் கணக்கிலிருந்து முன்கூட்டியே எடுக்க வேண்டும் எனில், செலவு மதிப்பீட்டின் அடிப்படையில் அல்லது மருத்துவப் பில்களை திருப்பிச்செலுத்திய பின்னரே கிடைத்தது.

மருத்துவ அவசரகாலங்களில் பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி! எப்படி பெறுவது?

ஆனால் கொரோனா தொற்றுநோய் அல்லது ஏதேனும் மருத்துவ அவசரநிலையின் போது திடீரென பணம் தேவைப்பட்டால் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைய நேரலாம். இதுபோன்ற சூழ்நிலையெல்லாம் மனதில் வைத்து, ஈபிஎஃப் உறுப்பினர்களுக்கு மேலும் வசதியாக, பிஎஃப் பணம் எடுக்கும் விதிமுறைகளை பிஎஃப் அமைப்பு மாற்றியமைத்துள்ளது. அதன்படி,  நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் ரூ .1 லட்சம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணத்தினை பெறுவதற்கு மருத்துவச்செலவுகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான  ஆவணங்கள் எதையும் ஆதாரமாக வழங்கத் தேவையில்லை எனவும் பிஎஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே இந்நேரத்தில், தற்போது மருத்துவ அவசரத்தேவைக்கான பணத்தினை எப்படி பெறுவது? என தெரிந்துக்கொள்வோம்.

1. நோயாளியை சிகிச்சைக்காக அரசு / பொதுத்துறை பிரிவு / இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அவர் அவசர அவசரமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதிகாரி ஒருவர் விசாரித்த பின்னர், அவரது மருத்துவத்தேவைக்கான பணம் முன்கூட்டியே வழங்கப்படும்.

2. ஊழியர் அல்லது எந்தவொரு குடும்ப உறுப்பினரும் மருத்துவமனையின் விவரங்களை அளிக்கும் விண்ணப்பத்தை இபிஎஃப் அலுவலகம் அல்லது ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். எப்பொழுதும் போல் பிஎப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் நடைமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3. பின்னர், இந்த தொகை உறுப்பினர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் பெறுவதற்கான வசதிகளைப் பெற்றுள்ளது.

  • மருத்துவ அவசரகாலங்களில் பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி! எப்படி பெறுவது?

தற்பொழுது ஈ.பிஎஃப் அலுவலகம்  அதன் உறுப்பினர்களுக்கு கொண்டு வந்துள்ள சலுகை வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பிஎஃப் பணத்தை இதுபோன்ற அவசரத் தேவைகளுக்காக எடுத்துப் பயன்படுத்துவது, எதிர்காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில், சேமிப்புப் பணத்தை இப்போழுதே எடுத்துவிட்டால் அதன் வாயிலாகக் கிடைக்கும் வட்டி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மருத்துவச் செலவுகளுக்கு வேறு வழியே இல்லை என்ற சூழலில் மட்டுமே இப்பணத்தினை எடுத்து செலவு செய்துக்கொள்ளலாம் என பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget