Kisan Vikas Patra: பணத்தை இரட்டிப்பாக்கும், அஞ்சல் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்.. எல்லோருக்குமானது இது..
அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் திட்டம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும். எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம்
![Kisan Vikas Patra: பணத்தை இரட்டிப்பாக்கும், அஞ்சல் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்.. எல்லோருக்குமானது இது.. Kisan Vikas Patra: Invest In This Post Office Scheme To Double Your Money Kisan Vikas Patra: பணத்தை இரட்டிப்பாக்கும், அஞ்சல் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்.. எல்லோருக்குமானது இது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/27/63196a89ff72071eee33cc090505f2881690463399144571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்கள் எப்போதும் தங்கள் பணத்தை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்க உதவும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதற்காக அஞ்சல்துறை பல திட்டங்களை வடிவமைத்துள்ளது. இது அரசால் வழங்கப்படும் திட்டங்கள் என்பதால், இதில் செய்யும் முதலீடு பாதுகாப்பாக இருப்பதுடன், உத்தரவாதமான வருவாயை உறுதி செய்கிறது.
அந்த வகையில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டம் 1988 -இல் இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 -ஆம் தேதி, இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்தின் காலம் (tenure ) 115 மாதங்கள் அல்லது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள். புதிய புதுப்பிப்புகளின்படி, ஒருவர் இந்த திட்டத்தில் 4 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களில் 8 லட்சமாக திருப்பித் தரப்படும். ஆரம்பத்தில், இந்தத் திட்டத்தில் 120 மாதங்களில் பணம் இரட்டிப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆகும். அதிகபட்சத் தொகைக்கு வரம்பு இல்லை. நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 115 மாதங்களின் முடிவில் இரட்டிப்பாகப் பெற முடியும். பணமோசடி செயல்பாடுகளைத் தடுக்க ரூ.50,000 அல்லது அதற்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு பான் கார்டு ஆதாரத்தை அரசு கட்டாயமாக்கியுள்ளது. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட முதலீட்டுக்கு, சம்பளச் சீட்டுகள், வங்கி அறிக்கைகள் மற்றும் ஐடிஆர் ஆவணங்கள் போன்ற வருமானச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் விவசாயிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது அனைவருக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தை பயன்படுத்த முடியும்.
இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி என்னவென்றால், விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)