search
×

ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?

ITR Filing: வருமான வரி கணக்கை சமர்பிப்பதற்கான அவகாசம் முடிந்தபிறகும், தாக்கல் செய்பவர்களில் யாருக்கெல்லாம் அபராதம் கிடையாது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

FOLLOW US: 
Share:

ITR Filing: வருமான வரி கணக்கை சமர்பிப்பதற்கான அவகாசம் முடிந்தபிறகும், தாக்கல் செய்பவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல்:

இந்தியாவில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தற்கான சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஜுலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. வருமான வரித்துறையின் இணையதளத்தின்படி, ஜூன் 29 ம் தேதி வரையில்  ஒரு கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 552  பேர் 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்த தகுதியானவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது விதி.

இதையும் படியுங்கள்: IT Return Filing 2024: ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்கிறீர்களா? இந்த ஆவணங்கள் கைவசம் இருப்பது அவசியம்..!

அபராதங்களும், இழப்பீடுகளும்:

குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நீங்கள்  வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும், ஆண்டு இறுதி வரை தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், தாமதத்தின் காலத்தைப் பொறுத்து ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதை எவ்வளவு தாமதப்படுத்துகிறீர்களோ, அதற்கு ஏற்ப வரியை குறைப்பதற்கான சில  சில விலக்குகளையும் இழக்க நேரிடும். அதிகபட்சமாக வருமான வரித் துறையின் கூடுதல் ஆய்வுக்கும் நீங்கள் உட்படுத்தப்படலாம். அதேநேரம், தாமதமாக வருமான வரி கணக்கு செலுத்தினாலும், சிலருக்கு மட்டும் அபராதங்களில் விலக்கு அளிக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

யாருக்கு அபராதங்களில் இருந்து விலக்கு கிடைக்கும்?

  • வரி செலுத்த வேண்டிய அளவிற்கு வருவாயை ஈட்டாத ஒருவர், காலக்கெடுவுக்குப் பிறகும் ரிட்டன் தாக்கல் செய்வதற்கு எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை.
  • பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சமாக இருந்தால் அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருந்து வயது 60 ஆக இருப்பவர்களும், அவகாசத்தை கடந்து ஐடிஆர் தாக்கல் செய்தாலும் அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உள்ளது.
  •  புதிய வரி விதிப்பின்படி, 3 லட்சம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு பலன் கிடைக்கும்.
Published at : 02 Jul 2024 01:27 PM (IST) Tags: Personal finance ITR income tax return finance tips

தொடர்புடைய செய்திகள்

SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!

SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!

Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!

டாப் நியூஸ்

Watch Annamalai BJP: ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை

Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?

Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!

Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!

Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி

Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி