மேலும் அறிய

IT Return Filing 2024: ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்கிறீர்களா? இந்த ஆவணங்கள் கைவசம் இருப்பது அவசியம்..!

IT Return Filing 2024: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது கைவசம் வைதிருக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

IT Return Filing 2024: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது எந்தெந்த ஆவணங்களை கைவசம் வைதிருக்க வேண்டும் என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வருமான வரி கணக்கு தாக்கல் 2024:

2023-24 நிதியாண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறை வேகமாக நடந்து வருகிறது. ஒருவேளை, நீங்கள் இன்னும் ITR 2024 ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதத்தை தவிர்க்க வரும் ஜூலை 31ம் தேதிக்குள் வரிமான வரிக் கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். அதை நீங்களே செய்ய விரும்பினால், அதுவும் மிகவும் கடினம் அல்ல.  பெரும்பாலான விவரங்கள் உங்கள் ஐடிஆரில் முன்பே நிரப்பப்பட்டிருக்கும். வருமானத்தை தாக்கல் செய்வதற்கு முன், ஒவ்வொரு வரி செலுத்துபவரும் சில ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். இதனால், ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் எந்த இடையூறும் இருக்காது. அதன்படி, கைவசம் இருக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

படிவம்-16:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு படிவம்-16 மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு பணியாளருக்கும் அவரது நிறுவனத்தால் படிவம்-16 வழங்கப்படுகிறது. இதன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிதாக இருக்கும். படிவம்-16 இல், வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்துடன், வருமானம், நிகர வருமானம், டிடிஎஸ் போன்றவற்றிலிருந்து விலக்குகள் பற்றிய முழுமையான தகவல்கள் உள்ளன. ITR இல் நிரப்பப்பட வேண்டிய பெரும்பாலான விவரங்கள் படிவம்-16 இல் உள்ளன.

வீட்டுக் கடன் விவரம்:

நீங்கள் ஏதேனும் ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் (NBFC) வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அந்த வங்கியிடமிருந்து முந்தைய நிதியாண்டிற்கான கடன் அறிக்கையை பெறுவது அவசியம். அதன் மூலம் உங்கள் கடனுக்கு நீங்கள் எவ்வளவு வட்டி செலுத்தினீர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. வருமான வரிப் பிரிவு 24(B) வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ஒரு நிதியாண்டில் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.

முதலீட்டுச் சான்றுகள் (Proofs For Investment):

வரிச் சேமிப்பிற்கு வருமான வரியின் 80C, 80CCC, 80CCD ஆகியவற்றின் கீழ் வரும் வழிகளில் முதலீடு செய்தால், அந்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் வரி விலக்கு மற்றும் தள்ளுபடிகள் கோருவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

மூலதன ஆதாய ஆவணங்கள்:

பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்ற சொத்து வகைகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் லாபம் ஈட்டினால், அது மூலதன ஆதாயம் எனப்படும். ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​மூலதன ஆதாய வடிவில் ஈட்டிய லாபம் பற்றிய தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

ஆதார் அட்டை, பான் அட்டை:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் மற்றும் பான் விவரங்களை சரிபார்ப்பதும் முக்கியம். எனவே, ரிட்டன் தாக்கல் செய்வதற்கு முன் இந்த இரண்டு ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால், அவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குவது அவசியம்.

சம்பள சீட்டு (PAY SLIP)

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துபவர் தனது சம்பள சீட்டையும் வைத்திருக்க வேண்டும். சம்பள சீட்டில், அந்த நபரின் வருமானம். DA, HRA போன்றவற்றைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. நீங்கள் முதன்முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், மேலே குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது புதிதல்ல என்றாலும், அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Embed widget