மேலும் அறிய

Indraja Robo Shankar marriage: பிகில் பாண்டியம்மாவுக்கு விரைவில் டும் டும் டும்... முறைமாமனை கரம் பிடிக்கும் ரோபோ ஷங்கர் மகள்

நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா தனது திருமணம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிகாரபூர்வமான தேதி விரைவில் அறிவிக்கப்படும் கூறியுள்ளார். இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் ’கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரோபோ ஷங்கர் வெள்ளித்திரையில் 'தீபாவளி' திரைப்படம் மூலம் அறிமுகமானார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் பின்னர் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். 

 

Indraja Robo Shankar marriage: பிகில் பாண்டியம்மாவுக்கு விரைவில் டும் டும் டும்... முறைமாமனை கரம் பிடிக்கும் ரோபோ ஷங்கர் மகள்


அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா. அதனை தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இந்திரஜா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. அவ்வப்போது ரீலிஸ் மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் கார்த்திக் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து மாமா என்ற கேப்ஷனுடன் பகிர்வார். இதனால் அவரின் ரசிகர்கள் பலருக்கும் அவர்கள் இடையே காதலா என்ற கேள்வி எழுப்பி வந்தனர்.  

 

Indraja Robo Shankar marriage: பிகில் பாண்டியம்மாவுக்கு விரைவில் டும் டும் டும்... முறைமாமனை கரம் பிடிக்கும் ரோபோ ஷங்கர் மகள்

அந்த வகையில் கார்த்திக் இந்திரஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அதற்கு அவரின் ரசிகர் ஒருவர் நீங்கள் இந்திரஜாவை திருமணம் செய்து கொள்ள போறீங்களா? என கேட்டுள்ளார். கார்த்திக் அதற்கு ஆமா... ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. முடிவு செய்ததும் சொல்லறோம்" அதற்கு இந்திரஜாவும் "அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும். இந்த சந்தோஷமான செய்தியை எனது நல விரும்பிகளுடன் நிச்சயமாக பகிர்வோம்" என பதிலளித்து இருந்தார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திராஜாவின் திருமணம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மதுரையை சேர்ந்த கார்த்திக் 'தொடர்வோம்' என்ற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையின் மூலம் சில குழந்தைகளை வளர்த்து வருகிறார். ரோபோ ஷங்கரின் பூர்வீகமும் மதுரை என்பதால் இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்ததால் உறவினர்களாக இருக்க கூடும் என தெரிகிறது. பெற்றோர்களால் நிச்சயாத திருமணமாக இருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகிறது. சினிமாவில் ஒரு இயக்குநராக வேண்டும் என்பதே கார்த்திக்கின் ஆசை. அவரும் திரைத்துறையில் இணையவே விருப்படுகிறார். இந்திரஜாவும் தற்போது நடிப்பு மற்றும் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவர்களது திருமண தேதி குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

LIK Trailer : என்னடி டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க...பொங்கிய பிரதீப்..லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்
LIK Trailer : என்னடி டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க...பொங்கிய பிரதீப்..லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
அப்பா இறந்தபின் தம்பி ராமையா எங்கள் வீட்டிற்கு வந்து சொன்ன வார்த்தை...எமோஷ்னலாக்கிய ரோபோ சங்கர் மகள்
அப்பா இறந்தபின் தம்பி ராமையா எங்கள் வீட்டிற்கு வந்து சொன்ன வார்த்தை...எமோஷ்னலாக்கிய ரோபோ சங்கர் மகள்
பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!
பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Tamilnadu Round Up: உணவகங்களில் விலை உயர்வு, சரிந்த தங்கம், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: உணவகங்களில் விலை உயர்வு, சரிந்த தங்கம், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
Trump Iran War: “மொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்“-ஈரான் வார்னிங்; ஹார்முஸை திறக்க நிபந்தனை - அது என்ன.?
“மொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்“-ஈரான் வார்னிங்; ஹார்முஸை திறக்க நிபந்தனை - அது என்ன.?
Embed widget