உங்கள் வருமான வரியை சேமிக்க வேண்டுமா?... இப்படி ஒரு சேமிப்பு ஐடியா இருக்கு.. இதைப் படிங்க..
வருமான வரி சட்டம் 1961 ல் உள்ள பிரிவு 80C ன் படி வருமான வரி தாக்கலின்போது வரி கழிப்பு பெற நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு என்பதே சிறந்த வழி.
வருமானவரி செலுத்தாமல் சேமிப்புத் தி்ட்டங்களில் முதலீடு செய்து சேமிக்க பல்வேறு வரி சேமிப்பு திட்டங்கள் உள்ளன. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் வரி சேமிப்புக்கான முதலீடுகள் என்று பார்க்கும் போது நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் தான் வரிசையில் முதலில் வந்து நிற்கும். வங்கி சார்ந்த முதலீட்டுத் தயாரிப்பு என்பதாலும் அதில் உள்ள குறைந்த ஆபத்து மற்றும் நிறைவான பாதுகாப்பான தன்மை ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புத் தொகையையே அதிகம் நம்புகின்றனர். அதில் முக்கியமானது பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் வரி சேமிப்பு திட்டமாகும். அதற்கு ஸ்டேட் வங்கி வைத்துள்ள பெயர், எஸ்பிஐ டேக்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்-2006 என்பது ஆகும். வழக்கமாக ஆண்டுக்கு ரூ.5 லட்சதுக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும்.
ஆனால், வருமானவரி செலுத்துவோரின் சிரமங்களை உணர்ந்து அதி்லும் அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. வருமான வரி சட்டம் 1961 ல் உள்ள பிரிவு 80C ன் படி வருமான வரி தாக்கலின் போது வரி கழிப்பு பெற நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு என்பதே சிறந்த வழி. அந்த வகையில் வருமானவரி செலுத்துவோர் வரியைச் சேமிக்கும் வகையில் ஏராளமான வருமானவரி சேமிப்புத்திட்டங்கள் உள்ளன. அதாவது, வருமானவரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தில் வரிவிலக்கு அளிக்கக்கூடிய பகுதியில் சேமிப்பு செய்திருத்தல், முதலீடு செய்திருந்தால், அதற்குரிய விண்ணப்பத்தை அளித்தால் அதற்குறிய பணம் வருமானவரித்துறையால் திரும்ப வழங்கப்படும். இதில் முக்கியமாக எஸ்பிஐ வங்கி வழங்கும் வரி சேமிப்புத் திட்டம். இந்த வருமானவரி சேமிப்புத் திட்டத்தில் வருமானவரி செலுத்தும் தனிநபர்ஒருவர் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள்வரை சேமிக்கலாம்.
இந்த திட்டத்தில்ஒருவர் குறைந்தபட்சம் ரூ1000 முதல் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த வருமானவரி சேமிப்புத் திட்டத்துக்கும், நிலையான வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டிஅளவுதான் கிடைக்கும். சமீபத்திய கணக்கின்படி, அதாவது பிப்ரவரி 15ம் தேதி நிலவரப்படி 5 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்களுக்கு 5.5% வட்டி தரப்படுகிறது. இந்த திட்டத்தில் தனிநபர்கள் முதலீடு செய்யும்போது, வருமானவரிச் சட்டம் 80சியின் கீழ் டிடிஎஸ் சலுகை உள்ளது. மேலும், வருமானவரிச் சட்டம் 15G/15Hஆகியவற்றின் கீழ் முதலீட்டாளர், வரிப்பிடித்தத்திலிருந்து விலக்குப் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்று வசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வரி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக்குடும்பத்திலும் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். இதற்கு பான் கார்டு வைத்திருப்பது கட்டாயம்.