ஆதாருடன் இபிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி? செப்.1 கடைசி... இல்லையேல் பணம் எடுக்க, செலுத்த சிக்கல்!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎஃப் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎஃப் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இணைக்காத பட்சத்தில், மாதந்தோறும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு தொகையை ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் வைப்பு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அதனால், மெத்தனம் காட்டாமல் ஆதாருடன் பிஎஃப் எண்ணை இணைத்துவிடுங்கள்.
முன்னதாக, வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள் தங்களின் யுஏன் எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த அவகாசம், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேதிக்குள் ஆதார் இபிஎஃப் கணக்கை இணைக்காவிட்டால் சந்தாதாரர்கள் தங்களது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணை இணைக்கும்படி நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இபிஎஃப் அறிவுறுத்தியுள்ளது.
சந்தாதாரர்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது இபிஎஃப் அலுவலத்திலோ ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
ஆதாருடன் இபிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி?
1. வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்
2. அந்தப் பக்கத்தில் உங்களின் UAN எண்ணைப் பதிவிடுங்கள். PF கணக்கை ஆன்லைன் மூலம் நிர்வகிக்க கொண்டுவரப்பட்டது தான் UAN என்ற Universal Account Number. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு UAN எண் வழங்கப்படும். இதை உங்களின் பே ஸ்லிப்பில் நிறுவனம் கொடுத்திருக்கும். இந்த எண் மூலம் தங்களுடைய PF தொடர்புடைய அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் பெறலாம்.
UAN எண்ணைப் பதிவிட்டு, அத்துடன் பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.
3. உள்ளே நுழைந்தவுடன் மெனு பார் இருக்கும். அதில் "Manage" என்பதைச் சொடுக்கி, KYC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
4. KYC கிளிக் செய்தவுடன் புதிய பக்கம் ஒன்று திறக்கும். அந்தப் பக்கத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள். பின்பு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
5. Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றைச் சரிபார்க்கப்படும். 8. அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கை உங்களுக்குக் கிடைக்கும். பின்னர் உங்களின் ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என்ற தகவல் வரும்.
அவ்வளவு தான் ஐந்தே எளிய முறையில் நீங்கள் ஆதார் பிஎஃப் கணக்கை இணைத்துவிடலாம்.