கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உங்களிடம் இருக்கா? அதை வங்கியில் மாற்றம் செய்யும் வழிமுறை இது தான்!
ரூ.5 ஆயிரம் நோட்டுகளுக்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்யும் போது குறைந்த அளவில் சேவைக்கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
நம்மிடம் எதிர்பாராதவிதமாக வரும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் படி சுலபமாக மாற்றிக்கொள்ளமுடியும். இருப்பினும் அந்த நோட்டுகளைப் பரிமாற்றம் செய்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது வங்கியின் முடிவாகும்.
நம்மிடம் சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்து சேர்ந்துவிடும். அல்லது நாமே கவனக்குறைவாக ரூபாய் நோட்டுக்களை கிழித்துவிடுவோம். இதனைப் பேருந்து பயணத்தின் போது, மளிகைக்கடை, காய்கறி கடைகள் போன்றவற்றில் கொடுத்து எப்படியாவது மாற்றிவிடலாம் என்று நினைப்பில் இருப்போம். ஆனால் பல நேரங்களில் மாற்ற முடியாமல் நம்மிடமே வைத்திருப்போம். அப்போது தான் நாம் வங்கிகளில் கொடுத்து இதனை மாற்றிவிடலாம் என்ற நினைப்பிற்கே வருவோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக தான் கிழிந்த ரூபாய் நோட்டுகள் குறித்த விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்திவருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் குறித்து மக்கள் பலருக்குத் தெரியாத காரணத்தினால் இன்னும் பலர் வீடுகளிலேயே கிழித்த 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போம். எனவே இந்நேரத்தில் ஆர்.பி.ஐ யின் விதிமுறையின் படி பணத்தை மாற்றம் செய்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
- 32
RBI ல் கிழித்த ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்யும் வழிமுறை:
நம்மிடம் உள்ள நோட்டுகள் சிறிய அளவில் கிழிந்திருந்தால் அதே அளவிற்கு வேறு நோட்டுகள் வங்கிகளில் மாற்றித்தரப்படும். ஆனால் நோட்டுகள் முற்றிலும் கிழிந்துப்போய் இருந்தாலோ? அல்லது எரிந்திருந்தாலே? அதனை வங்கிகளின் மூலம் மாற்றம் செய்ய முடியாது. இதனை ரிசர்வ் வங்கியில் கொடுத்துத் தான் மாற்றம் முடியும் என விதிமுறைகள் உள்ளன.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தின் மதிப்பு மற்றும் கிழிந்த நோட்டுகளின் நிலை அகியவற்றின் அடிப்படையில் முழுமையானப் பணத்தை நம்மால் பெறமுடியும். அதே நேரம் ரூபாய் 1 முதல் ரூபாய் 20 வரையிலான நோட்டுகள் எந்த அளவுக்குக் கிழிந்து இருந்தாலும் அவற்றின் முழு மதிப்புக்கும் வேறு நோட்டுகள் வங்கிகளில் மாற்றித்தரப்படும்.
ஒரு வேளை வங்கிகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய மறுக்கும் பட்சத்தில், இதுக்குறித்து ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. எனவே இனிமேல் எந்த அச்சமும் இல்லாமல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து சுலபமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய ரூபாய் நோட்டுகளை ஒரு நாளைக்கு 20 எண்ணிக்கை வரை இலவசமாக மாற்றி தரலாம் என்று அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்யும் போது குறைந்த அளவில் சேவைக்கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது.