search
×

உங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்கு சிறந்த 8 திட்டங்கள்!

குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு, தேவையான சேமிப்பினை இப்போதே சேமிக்க ஆரம்பித்திட, பல தாய்மார்களும், அப்பாக்களும் நினைப்பார்கள். அதற்கான சிறந்த வழிகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US: 
Share:

நம்மில் பலருக்கும் இன்றைய காலகட்டத்திலும் இருக்கும் முக்கிய கவலையே, நாம் கஷ்டப்பட்டாலும் நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் அடுத்த என்ன நடக்கும் என்று யாராலும் கூற இயலாது. ஏனெனில் எதிர்காலத்தில் இதைவிட மோசமான நெருக்கடியான நிலை கூட ஏற்படலாம். அப்போது நீங்கள் எதிர்கொள்ளும் நிதி ரீதியிலான பிரச்சினைகளை உங்கள் குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டுமா? என்ன?

இந்திய பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளின் கல்வி, திருமணச் செலவு மீது அதிகக் கவலை உண்டு. அதனால் குழந்தைகளுக்கு ஏற்ற திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்த சிந்தனை அவர்களுக்கு அதிகம் உண்டு. தாங்கள் இல்லாத போதும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எப்படி பாதுகாப்பை அளிப்பது என்பதே இந்திய பெற்றோர்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு முன்கூட்டியே திட்டமிடுவது உதவிகரமாக இருக்கும்.

ஆக குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு, தேவையான சேமிப்பினை இப்போதே சேமிக்க ஆரம்பித்திட, பல தாய்மார்களும், அப்பாக்களும் நினைப்பார்கள்.  இதற்காக 50:30:20 விதிகளை பின்பற்றலாம். இது மிகச் சிறந்த வழியே. இந்த விதிப்படி தனி நபர்கள் தங்களது மொத்த வருமானத்தில் 50% மளிகைப் பொருட்கள், வாடகை அல்லது மாதத் தவணை தொகைக்காக ஒதுக்க வேண்டும். இதே 30% வருமானத்தினை உணவு, ஆடை, விடுமுறைகளுக்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள வருமானமான 20% தொகையை சேமிப்பாக கட்டாயம் சேமிக்க வேண்டும். இந்த தொகையில் முதலில் அவசர தேவைக்காக நிதியை உருவாக்க வேண்டும். இது அவர்களது மாத வருமானத்தில் குறைந்தது ஆறு மடங்காவது இருக்க வேண்டும்.

இவ்வாறு அவசர காலத்திற்காக சேமிக்கப்படும் நிதியை மிக அவசரமான நெருக்கடியான காலகட்டத்தில், அதாவது மருத்துவ தேவை, வருமான இழப்பு காலங்களில் பயன்படுத்தலாம். இதனை லிக்விட் பண்டுகளாகவும் வைக்கலாம். அல்லது உங்களது வேறு சேமிப்பு கணக்குகள் மூலம் சேமிக்கலாம். மொத்தத்தில் அவசர காலத்தில் உதவும் வகையில் சேமிக்கலாம்.

உங்களது இலக்கினை தீர்மானித்திக் கொண்டு அதற்கேற்ப முதலீட்டினை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு பிபிஎஃப் திட்டத்தில் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 27,12,138 ரூபாய் முதிர்வாக கிடைக்கும். இதே தொகையை தேசிய ஓய்வூதிய திட்டம் எனில் உங்கள் கையில் 15 ஆண்டுகள் கழித்து சுமார் 21 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக இதனை தகுந்த ஆலோசனையுடன், உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். எப்படியிருப்பினும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.

பிபிஃஎப்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப் பல காரணங்கள் உள்ளன. 15 ஆண்டுகள் கொண்ட இந்தத் திட்டம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை உங்களால் உருவாக்கி வைக்க முடியும். தற்போது இதன் வட்டி விகிதம் 7.9 சதவீதம். வங்கிகளில் வழங்கப்படும் 7 சதவீத வட்டி விகிதங்களில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறது.

இதில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விலக்கு உண்டு. இது மட்டுமல்ல ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும். முதலீடுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டம் இது. குழந்தைகள் கல்வியைக் கட்டமைக்க இது சிறந்த வழியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் என்பது மட்டுமே தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், கல்வி கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

இரண்டாவதாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மியூச்சுவல் ஃபண்டுகள். பல வகையான திட்டங்கள் உள்ளன. அதில் உங்களது இலக்கிற்கு ஏற்ற ஒன்றினை, சரியான ஆலோசனையை பயன்படுத்திக் எடுத்துக் கொள்ளலாம்.

அரசு வங்கி சேமிப்பு கணக்குகள்

வங்கி டெபாசிட் அல்லது அரசு திட்டங்கள் ரிஸ்கே வேண்டாம் என நினைப்பவர்கள் வங்கி டெபாசிட்டுகளை செய்யலாம். ஆனால் இதில் வட்டி விகிதம் என்பது மிக குறைவு. எனினும் மிகப்பெரிய தொகைகளில் எனில் இதில் போட்டு வைக்கலாம்.

அப்படி இல்லாவிட்டால் அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி மூலம் முதலீடு செய்யலாம். அல்லது அஞ்சலகத்தின் மாத வருவாய் திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.

 

செல்வ மகள் திட்டம்

குழந்தைகள் கல்வியைக் கட்டமைப்பதற்கு ஏற்றதொரு அருமையான திட்டம் இது. அதேபோல் குழந்தைகளு க்கான முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய சிறந்த திட்டமாகவும் இது உள்ளது. சுகன்யா சம்ரிதி அக்கவுன்ட் என்ற இந்தத் திட்டம் வரி விலக்குடன் கூடிய 8.4 சதவீத வட்டியை வழங்குகிறது. வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி.யின் கீழ் வரிச் சலுகை உண்டு. இது பெண் குழந்தைகளுக்கான திட்டம் மட்டுமே.

பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் திருமணம் மற்றும் கல்விக்கு இந்தத் திட்டம் மூலம் சேமி க்கலாம். இதுவும் நீண்ட காலத் திட்டம் என்பது மட்டுமே ஒரு கவலை. மற்றபடி நீண்ட காலத் தொகுப்புத் திட்டமாகும். அதோடு நேரத்திற்கு நேரம் வட்டி வகிதம் மாறக் கூடியது மட்டுமே இதில் உள்ள ஒரு பிர ச்னை. வங்கிகளை விட அதிக வட்டி வழங்குவது இந்தத் திட்டத்தில் உள்ள நல்ல விஷயமாகும்.

 

தங்கத்தில் சேமிப்பு

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்குத் தங்கத்திலும் முதலீடு செய்யலாம். நேரடியாகத் தங்க கட்டிகள் அல்லது நாணயங்களாக முதலீடு செய்யக் கூடாது. இதனால் லாக்கர், இருப்புக் கட்டணம் செலுத்த வேண் டும். அதனால் பரிமாற்ற வர்த்தக நிதி மூலம் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். மின்னணு முறையில் தங்கத்தில் முதலீடு செய்தால் திருட்டுப் பயம் கிடையாது.

மாதந்தோறும் சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல முதிர்வு தொகை கிடைக்கும். சொத்துக்களில் இருந்து நீண்ட நாட்களில் கிடைக்கும் வருவாயை விட இது சிறந்தது. 10 முதல் 15 ஆண்டுகள் வரை இந்த முதலீட்டை வைத்திருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இதை விற்பனை செய்யும் போது மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும் என்பது மட்டுமே இதில் உள்ள சிறிய சங்கடம். அதேபோல் ஜூவல்லரி சார்ந்த திட்டங்களையும் தேர்வு செய்யலாம். இது பெண் குழந்தை வைத்திருப்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

 

ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ்

குழந்தைகளுக்குச் சொத்து சேர்க்க அனைவரும் ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸை நாடி செல்லும் நிலை உள்ளது. ஆனால், இதில் சில அபாயம் உள்ளது. குழந்தைக்குத் தேவைப்படும் போது அதை மீட்கும் சமயத்தில் அதன் தொகைக்கு உத்தரவாதம் கிடையாது. சந்தைக்கு ஏற்ப தான் இதன் நிலைப்பாடு இரு க்கும்.

உதாரணமாக 2030ம் ஆண்டில் உங்களது அனைத்து அலகுகளையும் விற்பனை செய்யும் போது சந்தையில் சரிவு இருந்தால் உங்களது குழந்தைக்குத் தேவையான நிதியை திரட்ட முடியாமல் போய்விடும்.

ஆனால் பல மியூச்சுவல் பண்டுகளின் முதிர்வு தொகை வங்கிகளின் டெபாசிட்டை விட அதிக அளவிலும் கிடைத்தள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால் இதை விட அதிக முதிர்வு தொகை தரக் கூடிய திட்டங்கள் இல்லை. குழந்தை கல்விக்குச் சேமிப்பு மற்றும் இதர திட்டங்களுக்காக முதலீடு செய்பவராக இருந்தால் இதைத் தேர்வு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

 

கடன் பரஸ்பர நிதிகள்

சில கடன் பரஸ்பர பத்திரங்கள் வங்கி டெபாசிட்களை விட அதிக முதிர்வு தொகையை வழங்கும் சிறந்த சலுகைகளை அறிவிக்கின்றன. வங்கி டெபாசிட்களை விட வரி திறனுக்கு ஏற்றதாக இருக்கும். குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு இதை விடச் சிறந்தது இருக்க முடியாது. நீண்ட கால முதலீட்டை விரும்பினால் இதற்குச் செல்லலாம். நீண்ட நாள் திட்டத்தில் சிறந்த முதிர்வு தொகையை வழங்குவார்கள் என்பது உண்மை. இதில் சிறிய அளவில் அபாயம் இருப்பதால் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது. கடன் பரஸ்பர நிதிகள் ஏஏஏ செக்யூரிட்டீஸ் என்ற தலைப்பின் கீழ் வருகிறது. பங்கு சந்தை வீழ்ச்சியின் போது இதில் சற்று இடைவேளி ஏற்படும்.

இது வங்கி டெபாசிட்கள் மற்றும் நிறுவன டெபாசிட்களைக் கலந்து செய்த கலவையாகும். குழந்தைகள் பாதுகாப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் நிறுவன நிரந்தர முதலீடு மற்றும் வங்கிகளின் நிரந்தர முதலீட்டுகள் இணைந்த உயர் தரமான திட்டங்களுக்குச் செல்லலாம். உதாரணமாக, வங்கிகளில் டெபாசிட்டுக்கு வழங்கப்படும் 6 முதல் 6.5 சதவீதத்துக்கு எதிராகக் கேடிடிஃஎப்சி நிறுவனத்தின் நிரந்தர முதலீட்டில் 8.25 சதவீத வட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கேரளா அரசின் ஆதரவுடன் உள்ள டெபாசிட் திட்டம். அதனால் இது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. உங்களது குழந்தைக்காகச் சேமிக்கும் போது பாதுகாப்பு என்பது முக்கியக் காரணியாக உள்ளது.

 

டியூட்ஸ்சி வங்கி

டியூட்ஸ்சி வங்கியின் 5 ஆண்டுகள் கொண்ட டெபாசிட் திட்டம் ஒன்று உள்ளது. இதில் ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைவு என்பதால் இதை பெரும்பாலும் யாரும் பரிந்துரை செய்வதில்லை.

இவற்றில் சுகன்யா சம்ரிதி, பிபிஃஎப் ஆகிய இரண்டும் குழந்தைகள் திட்டத்திற்குச் சிறந்ததாகும். இவற்றின் சிறந்த வட்டி விகிதம் மற்றும் வட்டிக்கு வரி விலக்கு என்பது முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும். தற்போது குழ ந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள் பல உள்ளன. இவற்றை ஆய்வு செய்து சிறந்ததைத் தேர்வு செய்ய வேண்டும். அது உங்களது சேமிப்பு திறன் மற்றும் காலத்தின் அளவை பொருத்ததாக இருக்க வேண்டும்.

இங்கே பரிந்துரை செய்யப்பட்ட சில குழந்தைகள் முதலீட்டுத் திட்டங்களுக்கு வரி விலக்கு இல்லாமல் உள்ளது. எனினும் அவை வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெறக்கூடியதாகும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்துவிட்டால் அதில் இருந்து வெளியே வந்து வேறு திட்டத்தில் முதலீடு செய்வது மிகச் சிரமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Published at : 04 Sep 2021 06:21 PM (IST) Tags: investment Child Investment Plans Best 8 Child Investment Plans Investment Plans Plans In India Investment Plans In India

தொடர்புடைய செய்திகள்

ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?

ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?

SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!

SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

டாப் நியூஸ்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்

Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?