ஓலாவின் முதல் ஊழியர் பிரனாய் தொடங்கிய ஸ்டார்ட்-அப்… ஆண்களின் பாலியல் நலனுக்கான App-இன் பெயர் தெரியுமா?
மதிப்பீடு, மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தல், மருந்துகளை வீட்டிலேயே டெலிவரி செய்தல், சிகிச்சை அமர்வுகளை திட்டமிடுதல், பின்தொடர்தல், வீட்டுச் சோதனைகள் என அனைத்து சேவைகளையும் இந்த தளம் வழங்கும்.
கேப் ஒருங்கிணைப்பாளரான ஓலாவின் முதல் ஊழியர் பிரனாய் ஜிவ்ராஜ்கா, ஆண்களுக்கான பாலியல் நலனில் கவனம் செலுத்தும் தனது சொந்த முயற்சியான Allo Health எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் தலைமையிலான நிதியில் இந்த முயற்சி ஏற்கனவே $4.4 மில்லியன் திரட்டியுள்ளது. நெக்சஸ் மட்டுமின்றி இந்தியாவின் பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்துபவர்கள் மற்றும் நிறுவனர்கள் பங்கும் இதில் உள்ளது. நெக்ஸஸ் தவிர, பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால், பிரணவ் பாய் (3one4), கல்யாண் கிருஷ்ணமூர்த்தி (பிளிப்கார்ட்), சுஜீத் குமார் (உடான்), அங்கித் பாடி (அம்னிக்/எக்ஸ் ஓலா), தீபிந்தர் கோயல் (ஜோமேட்டோ), ரோஹித் எம்ஏ (க்ளவுட்னைன்), கௌரவ் முன்ஜால் (அன்அகாடமி), நிதின் குப்தா (யுனி கார்ட்ஸ்), குணால் ஷா (CRED), சந்தீப் சிங்கால் (நெக்ஸஸ்), தரனா லால்வானி (இன்னோவென்) ஆகியோரது பங்குகள் உள்ளன. பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் ஒருவரின் பாலியல் நலனை மதிப்பிட்டு, முழுமையான சிகிச்சையை கவனிக்கும். மதிப்பீடு, மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தல், மருந்துகளை வீட்டிலேயே டெலிவரி செய்தல், சிகிச்சை அமர்வுகளை திட்டமிடுதல், பின்தொடர்தல், வீட்டுச் சோதனைகள் என அனைத்து சேவைகளையும் இந்த தளம் வழங்கும்.
நோயாளிகளை துல்லியமாக மதிப்பிடுவதற்கு தகுதியான மருத்துவர்களுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை நிறுவனம் நம்பியிருக்கும். ஸ்டார்ட்அப் தற்போது மூன்று மருத்துவர்களை கொண்டுள்ளது. "பாலியல் நல்வாழ்வு என்பது சமூகக் களங்கம் மற்றும் அதிக உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இவை உருவாகும் ஆண்டுகளில் பாலியல் கல்வியில் மட்டுப்படுத்தப்பட்ட கவனம், தகுதிவாய்ந்த மருத்துவர்களுக்கான குறைந்த அணுகல், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் ஆணாதிக்க மனப்பான்மை ஆகியவை பல தனிநபர்களை பாதிக்கின்றன" என்று ஜிவ்ராஜ்கா தனது நிறுவனத்தின் வலைப்பதிவு இடுகையில் எழுதினார். செய்தியாளர்களிடம் பேசிய ஜிவ்ராஜ்கா, "ஊடுருவக்கூடிய இந்த சந்தைக்கு சேவை செய்வதே யோசனை. நிதியைக் கொண்டு, நாங்கள் இப்போது செயல்பாடுகளை அளவிடுவது மற்றும் சந்தைகளில் நுழைவதையும் பார்க்கிறோம்." என்றார். இந்நிறுவனம் தற்போது 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக உள்ளது மற்றும் அனைத்துப் பணிகளையும் தீவிரமாக பணியமர்த்த விரும்புகிறது. சந்தையில் உள்ள சில நிறுவனங்களான மைம்யூஸ் மற்றும் ஃபார்மென் ஆகியவை பாலியல் ஆரோக்கிய தயாரிப்புகளை வியாபாரம் செய்து வருகின்றன. மற்றொன்று மொசைக் வெல்னஸ் என்ற பிராண்ட், இது உடல் சார்ந்து இயங்குகிறது, இதுவும் கிட்டத்தட்ட அதே பிரிவில் செயல்படுகிறது, Sequoia Capital India தலைமையில் கடந்த ஆண்டு $24 மில்லியன் திரட்டியது.
இதனை தொடங்குவதற்கு முன்பு, ஜிவ்ராஜ்கா ஓலாவுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பணியாற்றினார் மற்றும் 2017 முதல் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை ஓலா ஃபுட்ஸ் தலைவராக இருந்தார். கடந்த வாரம், ஓலாவின் இணை நிறுவனர் அங்கித் பாடி, முன்னாள் சகாக்களான சத்ய நாகராஜன் மற்றும் நிமிஷ் ஜோஷியுடன் இணைந்து ஒரு சேவையாக மென்பொருளில் அம்னிக் என்ற புதிய ஸ்டார்ட்அப்பை தொடங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், Sequoia Capital ஒரு இதன் ஒரு பகுதியாக தொடக்கத்தில் $15-$20 மில்லியன் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. ஓலா மற்றும் அதன் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், ஜிவ்ராஜ்கா மீண்டும் ஒன்றை தொடங்குவதற்கான ஒரு முன்னெடுப்புடன் வந்துள்ளார். ஓலா உடைந்த பைக்குகளை டெலிவரி செய்தல் முதல் டெலிவரி தாமதம் வரை, மோசமான வாடிக்கையாளர் கருத்துக்களை பெற்று வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.