மேலும் அறிய

New Tax Rules: வரி செலுத்துவோர் கவனத்திற்கு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள்! என்னென்ன?

ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் புதிய வரி வதிப்பு முறை, அடிப்படை விலக்கு வரம்பு ஆகியவை அமலுக்கு வருகின்றன.

புதிய நிதியாண்டு இன்று தொடக்கம்:

புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, பல மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மக்கள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வருமான வரி விதிகளும் அமலுக்கு வருகிறது. இது, வரி செலுத்தும் பலருக்கு பலன் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2024-25ஆம் நிதியாண்டுக்கான் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் 2024-25 நிதியாண்டுக்கான வரி விகித முறை வரி செலுத்துவோர் தேர்த்தெடுத்து கொள்ளமுடியும். அதாவது, பழைய வரி விதிப்பு முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி வதிப்பு முறை (New Tax Regime) இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். 

புதிய வரி விதிப்பு முறை:

புதிய வரி விதிப்பை தேர்வு செய்பவர்கள், புதிய அடுக்குகளின்படி வரி விதிக்கப்படும். புதிய வரி முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு வரி விதிக்கப்படாது.  3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். 

ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வரி விதிக்கப்படும் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பழைய வரி விதிப்பு முறையில் ((Old Tax Regime) மட்டுமே ரூ.50,000 விலக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதிய வரி விதிப்பு முறையிலும் ரூ.50000 விலக்கு அளிக்கும் முறை பொருந்தும்.  அதேபோல, புதிய வரி விதிப்பு முறையின்படி, ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை.

மேலும், ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தவர்களுக்கு வரிச் சுமையை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய வரி விதிப்பு முறையின்படி, ரூ.7 லட்சம் அல்லது அதற்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி சலுகையானது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்பு சம்பளத்திற்கான (Leave Encashment) வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

தலைப்பு செய்திகள்

Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget