search
×

வசதியான ஓய்வுக்காக நிலையான வருமான திட்டத்தை வழங்கும் ஹெச்டிஎஃப்சி லைஃப் திட்டம்

விரும்பிய வாழ்க்கை முறை மற்றும் நிதிப் பாதுகாப்பை நீங்கள் பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த கவனமான திட்டமிடல் தேவைப்படுகிறது.

FOLLOW US: 
Share:

ஓய்வூதியம் என்பது நாம் அனைவரும் எதிர்நோக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டமாகும். ஆனால், நீங்கள் விரும்பிய வாழ்க்கை முறை மற்றும் நிதிப் பாதுகாப்பை நீங்கள் பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த கவனமான திட்டமிடல் தேவைப்படுகிறது. ஓய்வூதியத்திற்குப் பிந்தைய நிலையான வருமானத்தை உருவாக்குவது இந்தத் திட்டமிடலின் முக்கியமான அம்சமாகும்.

இந்த இலக்கை அடைவதற்கான மூன்று முக்கிய உத்திகளை தற்போது பார்ப்போம். வரி திட்டமிடல், சுகாதாரச் செலவுகளை மதிப்பீடு செய்து, நிர்வகித்தல், ஹெச்டிஎஃப்சி ஆயுள் வருமானக் காப்பீட்டுத் திட்டம் போன்ற உத்தரவாதமான வருமான திட்டத்தில் முதலீடு செய்தல் ஆகியவை முக்கிய உத்திகளாகும். கூடுதலாக, இதன் நன்மைகளை தற்போது ஆய்வு செய்வோம்.

வரி திட்டமிடல்:

வரி திட்டமிடல் என்பது ஓய்வூதியத்தின் போது நிலையான வருமானத்தை உருவாக்குவதற்கான ஒரு அடிப்படை அங்கமாகும். உங்கள் வரி உத்தியை மேம்படுத்துவதன் மூலம், உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம். உங்கள் ஓய்வூதிய சேமிப்பின் மீதான வரிகளின் சுமையை குறைக்கலாம்.

EPF, PPF போன்ற குறைந்த வரி செலுத்த வேண்டிய ஓய்வூதிய கணக்குகள், சிறந்த முதலீட்டு திட்டங்களாக உள்ளன. அவற்றை திரும்பப் பெறும் வரை உங்கள் சேமிப்பை வரியின்றி பெருக்க உதவுகின்றன.

மேலும், முதலீட்டு திட்டங்களை பல்வகைப்படுத்துங்கள். NPS, SCSS, மியூச்சுவல் பண்ட்ஸ் போன்ற குறைந்த வரி செலுத்த வேண்டிய திட்டங்களில் முதலீடு செய்து சொத்துகளைச் சேர்க்க திட்டமிடுங்கள். நிதி ஆலோசகரை ஆலோசிப்பது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வரி-திறன்மிக்க ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய உதவும்.

சுகாதார செலவுகளை மதிப்பிடு செய்து, நிர்வகித்தல்:

உங்கள் ஓய்வூதிய வருமானம் நிலையானதாக இருப்பதை உறுதிசெய்ய சுகாதாரச் செலவுகளை மதிப்பிடுவதும் நிர்வகிப்பதும் அவசியம். உடல்நலப் பாதுகாப்புச் செலவுகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். மேலும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் உங்கள் நிதியை கணிசமாக பாதிக்கும். ஓய்வூதியத்தின் போது உங்கள் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் விரிவான உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

கூடுதலாக, நர்சிங் ஹோம் கேர் அல்லது ஹோம் ஹெல்த்கேர் சேவைகளின் விலை கணிசமானதாக இருக்கும் என்பதால், நீண்ட கால பராமரிப்பு காப்பீட்டு திட்டங்களை ஆராயுங்கள். பிரத்யேக சுகாதார நிதி மற்றும் காப்பீட்டுத் கவரேஜ் இருப்பது மன அமைதியை அளிக்கும். உங்கள் ஓய்வூதிய வருமானத்தைப் பாதுகாக்கும்.

உத்தரவாதமான வருமானக் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தல்:

ஹெச்டிஎஃப்சி ஆயுள் வருமானக் காப்பீட்டுத் திட்டம் போன்ற உத்தரவாதமான வருமானத் திட்டத்தில் முதலீடு செய்வது,
ஓய்வூதியத்தில் நிலையான வருமானத்தை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று. இந்தத் திட்டம் உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் பல நன்மைகளை வழங்குகிறது:

உத்திரவாதமான வருமானம்: ஹெச்டிஎஃப்சி ஆயுள் உத்திரவாத வருமானக் காப்பீட்டுத் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. இது உங்களின் ஓய்வுபெறும் ஆண்டுகளில் நிலையான நிதி ஓட்டத்தை உறுதி செய்கிறது. இந்த கணிக்கக்கூடிய வருமானம் உங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுசெய்யும். மன அமைதியை அளிக்கும்.

நிதிப் பாதுகாப்பு: இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை உங்களின் ஓய்வூதியப் போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகித ஏற்ற இறக்கங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்கிறீர்கள். உங்கள் வருமானம் நிலையானது. பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், நிதி பாதுகாப்பை வழங்கும்.

திட்டத்தை ஏற்ற வகையில் மாற்றி கொள்ளுதல் மற்றும் தனிப்பயனாக்கம்: இந்தத் திட்டம் உங்கள் ஓய்வூதிய இலக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும், அதன் கால அளவையும் மாற்றியமைக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர தவணையில் பணம் செலுத்த விரும்பினாலும், உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு திட்டத்தை மாற்றி அமைக்கலாம்.

வசதியான ஓய்வுக்கான நிலையான வருமானத்தை உருவாக்குவதற்கு பல்வேறு காரணிகளை கவனமாக திட்டமிட வேண்டும். கருத்தில் கொள்ள வேண்டும். வரி திட்டமிடல், மதிப்பீடு செய்தல் மற்றும் சுகாதார செலவுகளை நிர்வகித்தல், ஹெச்டிஎஃப்சி லைஃப் உத்திரவாதமான வருமானக் காப்பீட்டுத் திட்டம் போன்ற உத்தரவாதமான வருமானத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்களின் ஓய்வூதிய ஆண்டுகளுக்கு ஒரு வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்க முடியும்.

உத்திரவாதமான வருமானம் மற்றும் நிதிப் பாதுகாப்பின் மூலம் கிடைக்கும் மன அமைதியுடன், உங்கள் ஓய்வு காலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். உங்கள் ஓய்வூதிய வருமானத்தைப் பாதுகாக்க இன்றே திட்டமிடத் தொடங்குங்கள். கவலையற்ற ஓய்வு நாளை அனுபவிக்கவும்.

பொறுப்பு துறப்பு:

இது, விளம்பர கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.

இதையும் படிக்க: HDFC Life Click 2 Protect Super: பாரம்பரிய ஆயுள் காப்பீடும், டெர்ம் ஆயுள் காப்பீடும்: உங்களுக்கு எது சிறந்தது? ஏன்?

Published at : 13 Oct 2023 08:02 PM (IST) Tags: hdfc HDFC Life Insurance Plan HDFC Plan HDFC scheme HDFC Insurance scheme

தொடர்புடைய செய்திகள்

Leo:  விஜய்யின் லியோ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த முதலமைச்சர்!

Leo: விஜய்யின் லியோ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த முதலமைச்சர்!

Diwali Muhurat Trading 2023: அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: நேரத்தை அறிவித்த தேசிய பங்குச்சந்தை

Diwali Muhurat Trading 2023: அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: நேரத்தை அறிவித்த தேசிய பங்குச்சந்தை

ஒரே தற்கொலை எண்ணம், என்னை காப்பாற்றுங்கள்... தமிழக முதலமைச்சருக்கு நெல்லை காவலர் கோரிக்கை!

ஒரே தற்கொலை எண்ணம், என்னை காப்பாற்றுங்கள்... தமிழக முதலமைச்சருக்கு நெல்லை காவலர் கோரிக்கை!

Loan Against Mutual Funds: மியூசுவல் ஃபண்டுக்கு எதிராக கடனைத் பெற விருப்பமா? எவ்வாறு பெறுவது? விவரம்

Loan Against Mutual Funds: மியூசுவல் ஃபண்டுக்கு எதிராக கடனைத் பெற விருப்பமா? எவ்வாறு பெறுவது? விவரம்

Top Losers August 17, 2022: பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டியில் அதிக நட்டம் அடைந்தோரின் பட்டியல்

Top Losers August 17, 2022: பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டியில் அதிக நட்டம் அடைந்தோரின் பட்டியல்

டாப் நியூஸ்

kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!

The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!

Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி

Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி

கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்