LIVE | Kerala Lottery Result Today (22.10.2025): கன மழைக்கு மத்தியில் பண மழை கொட்டுமா? இதோ லாட்டரி முடிவுகள்!
Kerala Lottery Result Today LIVE: இன்று (அக்.22) தனலட்சுமி லாட்டரி குலுக்கல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவோர் விவரங்களை விரைவில் அறிந்துகொள்ளலாம்.
LIVE

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (22.10.2025): கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
கேரளா லாட்டரி என்பது கேரள அரசால் நடத்தப்படும் முழுமையாக சட்டபூர்வமான, பாரதிராஜ்ய அரசின் அனுமதி பெற்ற லாட்டரி திட்டமாகும். இது, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Weekly & Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்பர் டிரா (Bumper Draws) என்பவற்றைக் கொண்டுள்ளது.
கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அரசு லாட்டரி அமைப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. லாட்டரி குலுக்கல் நேர்மையாக நடைபெற அரசு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர். தினசரி பல்வேறு பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.
தனலட்சுமி லாட்டரி குலுக்கல்
அந்த வகையில் இன்று (அக்.22) தனலட்சுமி லாட்டரி குலுக்கல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவோர் விவரங்களை விரைவில் அறிந்துகொள்ளலாம்.
பரிசு வென்றவர்கள் தங்கள் வெற்றி எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் பரிசுகளைப் பெற, அவர்கள் 30 நாட்களுக்குள் வென்ற டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
Kerala Lottery Result LIVE: லாட்டரி டிக்கெட் வாங்குவோர், வாங்க நினைப்போர் கவனத்துக்கு!
லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால் பொறுப்புடனே வாங்க வேண்டியது முக்கியம். இங்கு அளிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் காரணங்களுக்காக மட்டுமே தவிர, லாட்டரிக்கான விளம்பரம் அல்ல. ஏபிபி நாடு எந்த வகையிலும் லாட்டரி விற்பனையை ஆதரிக்கவில்லை.
எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?
ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்





















