அதானி முறைகேடு வழக்கு - எல்.ஐ.சி.க்கு ஒரே நாளில் ரூ.1,200 கோடி இழப்பு! காரணம் என்ன?
LIC: அதானி குழும பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி.-க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழும பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி.-க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல இந்திய தொழிலதிபரான கெளதம் அதானி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. இது தொழில் துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உட்பட மொத்தம் 7 பேர் சேர்ந்து இந்தியவில் சோலார் மின் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு 265 மில்லியல் டாலர் இந்திய ரூபாட் மதிப்பில் ரூ.2029 கோடிக்கு லஞ்சம் கொடுத்தள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், அதானியில் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் வினீத் ஜெயில், அதானி இருவரும் இணைந்து சோலார் திட்டங்களைப் பெற லஞ்சம் கொடுத்ததை முதலீட்டாளர்களிடம் தெரிவிக்காமல் கடன், பத்திரமாகவும் 3 பில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கெளதம் அதானியும், சாகர் அதானியும் அமெரிக்காவில் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே புகார் இருக்கிறது. ஹிட்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானியின் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் பட்டியலில் அதானியும் இடம்பெற்றுள்ளார்.
எல்.ஐ.சி. பங்குகள் வீழ்ச்சி:
அதானி மீதான குற்றச்சாட்டு காரணமாக பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் 20% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய ’institutional investor’ரான எல்.ஐ.சி.யின் பங்குகள் ரூ.12,00 கோடி ஒரே நாளில் வீழ்ச்சியடைந்துள்ளது.
2024, செப்டம்பர் பங்குதாரர் திட்டத்தின்படி, எல்.ஐ.சி. அதானியுன் எழு நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொலியூசன்ஸ், அதானி டோட்டல் கேஸ், ACC, அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றில் பங்குதாரராக உள்ளது. இன்று மட்டும் பங்கு மதிப்பு ரூ.11.728 கோடி
சரிவடைந்துள்ளது.
எல்.ஐல்.சி.யில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.5,009.88 கோடியும், அதானி எண்டர்பிரைசிஸில் ரூ.3,012.91 கோடியும் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1,207.83 கோடியும் டோட்டல் கேஸ் நிறுவனத்தில் ரூ.807.48 கோடியும், அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் 716.45 கோடியும், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தில் ரூ.592.05 கோடியும் ACC-யில் ரூ.382.66 கோடியும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதானி மீது புகார் - முதலீட்டாளர்கள் ரூ.2.60 லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு 20 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.2.60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 422.59 அல்லது 0.54% புள்ளிகள் சரிந்து 77,155.79 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 168.60 அல்லது 0.72% புள்ளிகள் சரிந்து 23,349.90 ஆகவும் வர்த்தகமாகியது.