LIC IPO Discount: எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, IPO-இல் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்ன?
எல்.ஜசி ஐபிஓ விற்பனை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
![LIC IPO Discount: எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, IPO-இல் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்ன? LIC IPO Price Band Rs 902-Rs 949 Rs 60 discount for policy holders on shares Check Details LIC IPO Discount: எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, IPO-இல் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/10cf9e6899abb33004090946863751ab_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசு எல்.ஐ.சியின் சில பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது. அதன்படி விரைவில் எல்.ஐ.சியின் ஐபிஓ வெளியாகும் என்ற தகவல் பரவி வந்தது. இந்நிலையில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனை வரும் மே 4 முதல் 9 வரை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தப் பங்குகளின் தொடக்க விலை 902 முதல் 949 ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்.ஐ.சியின் பங்குகளில் விற்பனைக்கு வர உள்ள நிலையில் இந்தப் பங்குகளில் 10 சதவிகிதம் தற்போது உள்ள பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 சதவிகிதம் எல்.ஐ.சி ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி எல்.ஐ.சியில் பாலிசிதாரர்களாக இருக்கும் நபர்கள் இந்தப் பங்குகளை வாங்கும்போது விலையில் இருந்து 60 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாலிசிதரர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளில் ஒன்று.
எல்.ஐ.சி நிறுவனத்தின் 22ஆயிரம் பங்குகள் வரும் மே 4 முதல் 9 வரை விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை செபி தற்போது அளித்துள்ளதாக தெரிகிறது. எல்.ஐசி நிறுவனம் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் எல்.ஐசி நிறுவனம் காப்பீட்டு பாலிசிகளை அளித்து வருகிறது. காப்பீட்டு பாலிசி அளிக்கும் துறையில் உலகளவில் எல்.ஐசி நிறுவனம் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த வருமான கடந்த 2020-21 நிதியாண்டில் சுமார் 6.82 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. எல்.ஐ.சியின் வராக்கடன் மதிப்பு 6 சதவிகிதமாக உள்ளதாக கணக்கு தனிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை சற்று தள்ளி வைக்கப்பட்டது. மேலும் அப்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் 31.6 ஆயிரம் கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்து. அது தற்போது 22 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு தனியார் மயமாக்கம் மூலம் நடப்பு நிதியாண்டில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை ஒரு முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)