Kerala Lottery Result: திக்குமுக்காட வைக்கும் திருவோணம் பம்ப்பர் லாட்டரி: ரூ.25 கோடி முதல் பரிசு, அதிர்ஷ்டம் உங்களை தேடி!
Kerala thiruvonam Bumper Lottery Result: நாளை நடைபெறும் திருவோணம் பம்ப்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்பட உள்ளது.

லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் ஏற்படுத்திய கேரள திருவோணம் பம்ப்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நாளை (அக்.4) நடைபெற உள்ளது. நாளை மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இந்த குலுக்கல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவோணம் பம்ப்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்பட உள்ளது.
முன்னதாக இதற்கான டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் விற்றுத் தீர்ந்தன. இந்த ஆண்டு மட்டும், சுமார் 75 லட்சம் திருவோணம் பம்பர் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்த லாட்டரி முதலில் செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்தது. பின்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தாமதத்துக்கு என்ன காரணம்?
பின்னர் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்ட சுணக்கம், கன மழை, ஏஜெண்டுகளின் கோரிக்கை உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் 4ஆம் தேதிக்கு லாட்டரி குலுக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.
பாலக்காட்டில் அதிக விற்பனை
பாலக்காடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,07,100 டிக்கெட்டுகள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சூர் (9,37,400) மற்றும் திருவனந்தபுரம் (8,75,900) ஆகிய மாவட்டங்கள் இடம்பிடித்து உள்ளன.
லாட்டரி பரிசு விவரம் தெரியுமா?
முதல் பரிசு: ₹25 கோடி (1 வெற்றியாளர்)
இரண்டாம் பரிசு: ₹1 கோடி (தலா 20 வெற்றியாளர்களுக்கு)
மூன்றாம் பரிசு: ₹50 லட்சம் (தலா 20 வெற்றியாளர்களுக்கு)
நான்காவது பரிசு: தலா ₹5 லட்சம் (தலா 10 வெற்றியாளர்களுக்கு)
ஐந்தாவது பரிசு: ₹2 லட்சம் (தலா 10 வெற்றியாளர்களுக்கு)
அதேபோல ₹5000 முதல் ₹500 வரையிலான கூடுதல் பரிசுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏஜெண்ட் கமிஷன் எவ்வளவு?
திருவோணம் பம்ப்பர் லாட்டர் பரிசுத்தொகையில் 7 சதவீதம் ஏஜெண்ட் கமிஷனாகவும், 30 சதவீதம் வருமான வரியாகவும் பிடித்துக் கொள்ளப்படும். ஆக மொத்தம் 37 சதவீதம் பிடித்தது போக, ஏனைய தொகை அனைத்து அதிர்ஷ்டசாலிகளுக்கும் கொடுக்கப்படும் என்று கேரள மாநில லாட்டரி துறை தெரிவித்துள்ளது.
பூஜை லாட்டரி விற்பனை தொடக்கம்
அதேபோல நாளை (அக்.4) பூஜை லாட்டரி விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது. 300 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





















