சந்தை நிலவரம் குறித்த புரிதல்; புதுவித ஐடியா, வெற்றியை சாத்தியமாக்கிய டிரெண்ட் செட் நிறுவனங்கள்!
தொழிற்புரட்சியை ஏற்படுத்திய பிராண்ட்ஸ் பற்றி 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிராண்டிங் நிபுணர் சாமுவேல் மேத்யூ தெரிவிக்கும் சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில், தொழிற்புரட்சியை ஏற்படுத்துவதோடு, மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் சில ட்ரெண்ட் செட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தொலை நோக்குப் பார்வையோடு சிந்தித்து, அனைத்து சமூகப் பொருளாதார அடுக்குகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி சிறந்த தயாரிப்புகளையும், மேம்பட்ட சேவைகளையும் வழங்குவது இந்த நிறுவனங்களே. இந்த கட்டுரையில் தங்களது தொழில்களை மாற்றியமைத்ததன் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சில முக்கிய கண்டுபிடிப்பாளர்களைப் பற்றி 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் பிராண்டிங் நிபுணருமான (Branding Expert & CEO of 7 MILES PER SECOND) சாமுவேல் மேத்யூ தெரிவிக்கும் சுவாரஸ்ய தகவல்களை கானலாம்.
வரலாற்றில், பல பிராண்டுகள் அந்தந்த துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. மக்களுடன் அன்றாடப் புழக்கத்தில் உள்ள சில பிரபலமான பிராண்ட்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்
ஏர்லைன்ஸில் ஏர் டெக்கான், ஜுவல்லரியில் லலிதா, ரியல் எஸ்டேட் துறையில் ஜி ஸ்கொயர், FMCG யில் பிரிட்டானியா, பானங்களில் பார்லே, மற்றும் சுகாதாரத்துறையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்றவை நவீன தொழில்களுக்கு அடித்தளமிட்டு முன்னோடியான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பிராண்டுகள் புதிய யுக்திகளை பயன்படுத்தி புதிய பாதையை உருவாக்கினார்கள் அதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அவர்களின் வழித்தடங்களை பின்பற்ற வைத்தார்கள்.
ஒரு உண்மையான தொழில்துறை மாற்றத்திற்கும் முன்னோடியான புதுமைக்கும் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் அவர்கள் அமைத்த வழித்தடங்கள் காரணமாக அமைந்தது.வணிக சந்தைகளில் ஒரு கட்டத்தில் , புதிய கண்டுபிடிப்பாளர்கள் தோன்றினார்கள். அவர்கள் தான் நுகர்வோர்கள் தரம், செலவு மற்றும் வசதியை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். மற்றவர்களுடன் போட்டியிடாமல் தங்களால் முடிந்ததை சாத்தியமானவற்றை தங்களுக்குள் மறுவரையறை செய்தார்கள். இதற்காக அவர்கள் தங்களது இலாப வரம்புகளை கூட தளர்த்திக் கொள்ள தயாராக இருந்தார்கள். வணிகத்தில் புதிய தொழில் அளவுகோல்களாக மாறிய பல உயர்ந்த தயாரிப்புகளை உருவாக்க அவர்கள் தங்களுக்குள் செய்து கொண்ட இந்த சமரசங்களும் காரணமாக அமைந்தன. அந்த நிறுவனங்களின் தலைவர்கள் இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க சமூக நன்மைகளுக்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான அணுகு முறையையும் மேம்படுத்தியது.
சிக் ஷாம்பு:
சிக் ஷாம்புவின் புதுமையான அணுகுமுறை இந்தியாவில் ஷாம்பு சந்தையை முற்றிலுமாக மாற்றியது. கடுமையான போட்டிகளை எதிர்கொண்ட சிக் ஷாம்பு, மலிவு விலையில் சிறிய சாஷேக்களை அறிமுகப்படுத்தியது. இதனால் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இருந்த ஷாம்புகள் எளிய மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் சாஷேக்களாக சந்தைகளுக்கு வந்தது. இது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் தொழில்துறையில் புதிய புரட்சியையும் ஏற்படுத்தியது.
ஏர் டெக்கான்:
இந்த நிறுவனம் விமானத்தில் அனைவரும் பறக்கலாம் என்பதை சாத்தியமாக்கியது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஜி.ஆர்.கோபிநாத் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் டெக்கான் மூலம் புதிய புரட்சியை உருவாக்கினார். விமானத்தில் பறக்கும் கட்டணத்தினை ரூ.1 க்கு வழங்கியதன் மூலம் விமானத்தில் பலரும் பயணம் செய்தனர். கோபி நாத்தின் இந்த தொலைநோக்கு பார்வையினால் எண்ணற்ற மக்கள் மகிழ்ச்சியாக விமானப் பயணத்தியனை அனுபவித்தனர். இது வியாபாரத்தினையும் தாண்டி சமூகப் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்தெறிந்தது.
ஜி ஸ்கொயர் :
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றாக தனிமனை என்ற ஐடியா மூலம் ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிக் கொடியை நாட்டிய நிறுவனம் ஜி ஸ்கொயர். கொரோனா காலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் மட்டுமின்றி அந்த மொத்த குடியிருப்புவாசிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த நேரத்தில் தான் மக்களுக்குப் பாதுகாப்பான,அதே மேம்பட்ட வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றாக தனிமனை என்ற ஐடியா மூலம் ரியல் எஸ்டேட் சந்தைக்குள் கால் பதித்தது. தனி வீடுகள் என்பது நகரங்களுக்கு வெளியே தான் கிடைக்கும் என்றிருந்த காலத்தில் நகரத்திற்குள்ளாகவே மக்கள் ரசனைகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் கூடிய தனி மனைகளை விற்பனை செய்தது.
ஜி ஸ்கொயரின் இந்த ஐடியாவை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஜி ஸ்கொயரில் முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீடுகள் இரட்டிப்பாவதை உணர்ந்தனர். இதனால் ஜி ஸ்கொயரின் தனிநபர் மனைகளில் மக்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஜி ஸ்கொயரின் இந்த புதுமையான அணுகுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்களின் சொந்த வீடு என்ற கனவு நினைவாகியுள்ளது.
லலிதா ஜூவல்லரி:
லலிதா ஜூவல்லரி தங்க நகைக்கான தனித்துவமான அடையாளமாக மாறி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. அவர்களின் புதுமையான உத்திகள் தங்க நகை சந்தையை முற்றிலுமாக மாற்றியமைத்தது.
சேதாரம் இல்லை, செய்கூலி இல்லை என்ற அவர்களின் விளம்பரம் லலிதாவின் மார்க்கெட்டிங்கை மேலும் வலுப்படுத்தியது. நம்பகத்தன்மையை உறுதியாக மாற்ற ஹால்மார்க்கிங் செய்தனர். குறைந்த மதிப்புக் கூட்டப்பட்ட கட்டணங்களுடன் தங்கத்தினை உற்பத்தி விலையில் வழங்கினார்கள். இது வாடிக்கையாளர்களை கவர்ந்தது. நடுத்தர வர்க்க மக்களுக்காக சிறுசேமிப்பு போன்று, தங்க நகைகளில் முதலீடு செய்வதை அறிமுகம் செய்தனர். இதனால் மக்களின் நம்பிக்கைக்குரிய ஜுவல்லரியாக லலிதா ஜூவல்லரி திகழ்கிறது
ஜியோ:
தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியதில் ஜியோவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு ஜிபியை ஒரு மாதம் முழுவதும் உபயோகித்து வந்த மக்களுக்கு தினமும் 2 ஜிபிக்களை வழங்கி அவர்களுக்கு இணைய உலகத்தின் வாசலைத் திறந்து வைத்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தேர்வாக ஜியோ மாறியது. தொலைத்தொடர்புத் துறையை ஜியோவின் வருகைக்கு முன் ஜியோவின் வருகைக்கு முன் என்று வகைப்படுத்தும் அளவிற்கு மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியது.
வணிகத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்பது முடிவல்ல; ஒரு புதிய தொடக்கம் வெற்றிக்கான மாற்றுப்பாதை என்பதை இந்த கதைகள் நிரூபிக்கின்றன. சிக், ஏர் டெக்கான், ஜி ஸ்கொயர், லலிதா ஜூவல்லரி மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் புதிய ஐடியாக்களை மட்டும் வைத்துக் கொண்டு களத்தில் இறங்கவில்லை, மக்களின் தேவையறிந்து சமூகத்தில் அவர்களுக்கு நிகழும் மாற்றமறிந்து தங்கள் உத்திகளை சிந்தித்து செயலாற்றினார்கள். அதன் மூலம் ஒரு மாபெரும் வெற்றியை கண்டடைந்தார்கள். நுகர்வோர்கள் திருப்தியடைய வேண்டும்; மாற்றமும் நிகழ வேண்டும் தொழிலில் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.