என்னாது முட்டை, இறைச்சியின் விலை குறைஞ்சிடுச்சா? விலைவாசி உயர்வு சரிவுக்கு இதான் காரணம்!
காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இஞ்சி, தக்காளி, பூண்டு போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணால் அளவிடப்படுகிறது, இது அன்றாட பொருட்கள், சேவைகளின் விலையை பிரதிபலிக்கிறது. எளிதாக சொல்ல வேண்டுமானால், விலைவாசி உயர்வை குறிக்கிறது. இது, 2024-25 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதாவது 4.6 சதவிகிதமாக சரிந்தது. 2018-19க்குப் பிறகு மிகக் குறைவான அளவுக்கு சென்றுள்ளது விலைவாசி உயர்வு.
நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு, இதை தொடர்ந்து மருத்து வருகிறது. இந்த சூழலில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்தது முட்டை, இறைச்சியின் விலை:
கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திற்கு பின் அதாவது, 67 மாதங்களில் சுமார் 6 ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும்.
காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.75 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பணவீக்கம், மார்ச் மாதத்தின் 2.69 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இஞ்சி, தக்காளி, பூண்டு போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனிடையே கடந்த மாதம், நகர்ப்புறங்களில் பணவீக்கம் 3.43 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 3.25 சதவீதமாகவும் இருந்தது.
விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம்:
சமீபத்திய ஆண்டுகளில் சில்லறை பணவீக்கத்தின் நிலையான வீழ்ச்சி இந்தியாவின் பொருளாதார பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இது மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் வெற்றியை பிரதிபலிக்கிறது.
ஆக்கபூர்வமான நிதிக் கொள்கைகள் முதல் நுகர்வோரை பாதுகாக்கும் முக்கியமான நிதி நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது வரை, அரசின் அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.
India's Retail Inflation Hits Six-Year Low
— PIB India (@PIB_India) April 16, 2025
Retail inflation in India, as measured by the Consumer Price Index (CPI), which reflects the cost of everyday goods and services, fell to a remarkable 4.6% in the fiscal year 2024-25, the lowest since 2018-19.
This milestone… pic.twitter.com/hlaEaX6YYn
கடந்த 2018-19 ஆம் ஆண்டிலிருந்து பணவீக்கம் இப்போது மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்தியா பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சிக்கு உகந்த சூழலையும் உருவாக்கியுள்ளது. வளர்ச்சி இலக்குகளில் சமரசம் செய்யாமல் விலை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.




















